அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன்.. நிலைகுலைந்த நெல்லை போலீஸ்.. திருநெல்வேலியில் துப்பாக்கிச் சூடு
திருநெல்வேலி: நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... பாப்பாக்குடியில் ஏற்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
திருநெல்வேலி அருகே அரிவாளால் வெட்ட முயன்றதாக சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு (Police Open Fire) நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி பாப்பாகுடியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது... நள்ளிரவு 11 மணியளவில், இரு தரப்புக்கும் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.. இந்த தகவல் போலீசாருக்கு எட்டிய நிலையில், 2 தரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் இருக்க விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்..
அதாவது, ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.. அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் இருந்த காவலர்களை நோக்கி அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தவும், தங்களைப் பாதுகாத்து கொள்ளவும், சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்..
இதையடுத்து, உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறதாம்.. ஆனால், சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications