என்ன ஸ்பீடு.. திருநெல்வேலி திக்குமுக்காடுதே.. மெட்ரோ சர்வே தொடங்கியது.. சுடசுட சூப்பர் ரிப்போர்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மெட்ரோ கொண்டு வரப்பட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன.
சென்னையை தொடர்ந்து பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ கொண்டு வரப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலியிலும் மெட்ரோ கொண்டு வரப்பட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ, எங்கே அமைப்பது, எந்த ரூட் அமைப்பது உள்ளிட்ட எதுவும் இங்கே முடிவு செய்யப்படவில்லை. முதலில் இங்கே எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ அமைப்பது என்று ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின் மெட்ரோவிற்கான மற்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இரண்டு கட்டமாக இந்த முடிவுகள் எடுக்கப்படும்.
டெண்டர்: இதற்கான சர்வே ரிப்போர்ட் தயாரிக்க நேற்று டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை அர்பன் மாஸ் டிரான்சிட் கம்பெனி என்ற நிறுவனம் வென்றது. இந்த நிறுவனம்தான் இன்று திருநெல்வேலியில் சர்வே செய்ய உள்ளது. அதாவது மெட்ரோ ரூட்டை எந்த பாதையில் தொடங்க வேண்டும் என்று இவர்கள் சர்வே செய்ய உள்ளனர்.
விரைவில் திருநெல்வேலி மெட்ரோ தொடர்பான முழு அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த அறிக்கை மூலம் எங்கெங்கே ஸ்டேஷன்கள் வரும் என்ற விவரம் வெளியாகும்.
சென்னை மெட்ரோ: ஏற்கனவே சென்னை மெட்ரோ முதல் கட்ட போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகிறது. மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 கோடியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில்தான் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு பின் சென்னை இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ சேவையாக இருக்க போகிறது.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி சேலம்: இன்னொரு பக்கம் மதுரை, கோவையில் மெட்ரோ வர இருக்கும் நிலையில் சேலம், திருச்சியிலும் மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன. அதற்கான பின்வரும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
சேலத்தில் 40 கிமீ தொலைவிற்கு, திருச்சியில் 38 கிமீ தொலைவிற்கு மெட்ரோ அமைக்க உள்ளனர். 1.எந்தெந்த ரூட்டில் மெட்ரோ அமைக்கலாம். 2.சாலைக்கு மேலே அமைப்பதா சாலைக்கு உள்ளே அமைப்பதா? 3. இதற்காக இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், பாலங்கள் எவை. 4.எந்தெந்த இடங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் 5. பணிகள் தொடங்கினால் போக்குவரத்தை எப்படி மாற்றுவது ஆகிய ஆலோசனை பணிகளை தொடங்கி உள்ளனர்.
மதுரை மெட்ரோ: மதுரை, கோவை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் முன்வே அளிக்கப்பட்டுவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications