திருட போன திருநெல்வேலி வீட்டில் மேலாடையின்றி ஆனந்த குளியல்.. கேமராவில் கண்ட காட்சி! ஆடிப்போன நெல்லை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே உள்ள மேலபாளமடை பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.. என்ன நடந்தது திருநெல்வேலியில்?
மேலபாளமடை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். கட்டுமானத் தொழிலாளியான அவர் இப்போது கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி அருணாவுக்கு 46 வயதாகிறது.. இவரும் கட்டுமான வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் அருணாவும், கல்லூரி மாணவியான மகளும் ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் மட்டும் வசித்து வந்துள்ளனர்.
பீரோவில் 3000 பணம்
கடந்த மாதம் 11ம் தேதி வழக்கம்போல் அருணா வேலைக்கு சென்றுவிட்டார்.. அவரது மகளும் காலேஜூக்கு கிளம்பி சென்று விட்டார்.. அன்று மாலை இருவரும் வீடு திரும்பியபோது எந்த சந்தேகமும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
மறுநாள் காலை பீரோவை திறந்து பார்த்தபோது, காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.3,000 காணாமல் போயிருந்தது.. இதனால் அருணா அதிர்ச்சியடைந்து,
உடனே உறவினர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சரி பார்த்தார்.. அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 19 வயது இளைஞர், வீட்டிற்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது..
மேலாடை இன்றி ஒரே ஒரு துண்டு
மேலாடை இல்லாமல் மதியம் வீட்டின் மாடி வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார் சுரேஷ்.. வீட்டின் வெளிக்கதவை இரும்பு கம்பியால் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் பாத்ரூம் எங்கே உள்ளே என்று தேடி சென்று, ஆனந்த குளியலை போட்டுள்ளார்.. பிறகு குளித்து முடித்ததுமே வீட்டிற்குள் இடுப்பில் ஒரே ஒரு துண்டு மட்டுமே சுற்றிக்கொண்டு, இங்குமங்கும் சுற்றித் திரிந்துள்ளார்..
பிறகு கிச்சனுக்கு சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அருணாவின் மகனின் சட்டையை எடுத்து அணிந்து கொண்டார்.. பீரோவில் ரூ.3,000 பணத்தையும் எடுத்து கொண்டு, வெளிப்புற கதவையும் சாத்திக் கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்.. இது அத்தனையுமே கேமராவில் பதிவாகியுள்ளது.
ஒரு மாத காலம் தீவிர தேடுதல் வேட்டை
இந்த காட்சிகளை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, அருணா சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், மேலபாளமடை பகுதியில் அவர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷை இன்று கைது செய்தனர். திருட சென்ற வீட்டில் குளித்த இளைஞரின் சிசிடிவி வீடியோதான், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications