திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வர வேண்டும்.. ஸ்கெட்ச் போடும் நயினார் நாகேந்திரன்!
நெல்லை: திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியில் வர வேண்டும் என்பதே விருப்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி உடைந்துவிட வேண்டும் என்று திருமாவளவன் விரும்புவதாக கூறிய அவர், பாமகவும் எங்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணக்கமாக உள்ளன. அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதனால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் மக்களிடையே விவாதம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பாஜக தலைவர்கள் தரப்பில் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தவெகவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் விலகி வெளியில் வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக தரப்பில் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்பின் பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து கொண்டது.
தற்போது மீண்டும் திருமாவளவனை பாஜக அணுகுவதாக தெரிகிறது. இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இருந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
பாஜக யாரையும் பின்னணியில் இருந்து இயக்கவில்லை. பாமக ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தார். தொடர்ந்து பாமக கூட்டணியில் வர வேண்டும் என்பதே விருப்பம். அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்து போக வேண்டும் என்று திருமாவளவன் விருப்பப்படுகிறார். ஆனால் எனக்கு திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளிவர வேண்டும் என்பதே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் திமுக கூட்டணியை பிரிக்க அதிமுக - பாஜக கூட்டணி செயல்படுவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications