• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நடிகை"யுடன் உல்லாசம்.. இன்னொரு சிவராமன் சிக்கினார்.. கையில் கிளவுஸ்.. போலீஸை திணறடித்த "தனிஒருவன்"

Google Oneindia Tamil News

நெல்லை: கொள்ளையடித்த நகைகளையெல்லாம் நடிகைகளிடம் இழந்த நிலையில், நெல்லை போலீசார், பலநாள் கொள்ளையனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சமீபகாலமாகவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளனர்.

இந்த புகார்களின் அடிப்படையில், போலீசாரும் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரை கண்டுபிடிக்கவே முடியவில்லை..

மனைவியை கட்டிப்போட்டு.. வீட்டிற்குள் நடந்த கொள்ளை.. பதறிப்போன நடிகர் ஆர்கே.. சிசிடிவியில் ஷாக் மனைவியை கட்டிப்போட்டு.. வீட்டிற்குள் நடந்த கொள்ளை.. பதறிப்போன நடிகர் ஆர்கே.. சிசிடிவியில் ஷாக்

 ஸ்பெஷல் கவனம்

ஸ்பெஷல் கவனம்

கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு சரியாக கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது... காரணம், கைரேகை கூட விட்டுச்செல்லாத அளவுக்கு மிக கவனமுடன் இந்த கொள்ளைகள் நடந்துள்ளதாம்.. அதனால், எங்கு கொள்ளை சம்பவம் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்களைப பிடிக்க போலீஸார், தனி கவனம் செலுத்தி தனி டீமையும் தயார் செய்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.. அங்குள்ள பண்ணைசங்கரய்யர் நகரில், கணேசன் என்பவர் வசித்து வருகிறார்..

திணறல்

திணறல்

இவரது வீட்டில் கடந்த ஜூலை 4-ம் தேதி யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. நைட் நேரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.. அதேபோல, அக்டோபர் 30-ம் தேதி சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில், ருபினா பர்வீன் என்பவரின் வீட்டிலும் இதுபோலவே நகைகள் களவு போயின.. இந்த கொள்ளை சம்பவத்திலும் போலீசார் தீவிர முயற்சி எடுத்தும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறினர்.. ஆனாலும், எப்படியாவது இக்கொள்ளைகளில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று தென் மண்டல ஐஜி-யான ஆஸ்ரா கர்க் மும்முரம் காட்டினார்..

 டவுட் கைரேகை

டவுட் கைரேகை

அதனால் நெல்லை மாவட்ட எஸ்பி-யான சரவணன், ஏடிஎஸ்பி-யான பல்வீர் சிங் ஆகியோர் கண்காணிப்பில் தனிப்படை இதற்காகவே அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீஸார், இந்த கொள்ளை சம்பவ விசாரணையில் குதித்தனர்.. கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகைகள் எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை திரட்டி விசாரித்தனர்.. அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில், நைட் நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது..

சுடலைப்பழம்

சுடலைப்பழம்

அந்த நபர் யார் என்பது தெரியாததால், அருகில் உள்ள மாவட்ட காவல்நிலையங்களுக்கும் அவரின் போட்டோவை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், அந்த நபரின் பெயர் சுடலைபழம் என்பது தெரியவந்தது.. 44 வயதாகிறதாம்.. நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது.. இவர் குமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பு, கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால், அவரைத் தேடி போலீசார் அங்கு விரைந்தனர்.. ஆனால், அவர் வீட்டில் இல்லை.. சொந்த ஊருக்கு வந்தே ஒரு வருடம் மேலாகிறதாம்..

 பை - 50 000

பை - 50 000

இதையடுத்து, பல்வேறு தீவிர வேட்டைகளில் இறங்கியதையடுத்து, அம்பாசமுத்திரம் பகுதியில் சுடலைபழம் நடமாடுவதாக க்ளூ கிடைத்தது.. அதன்படியே அங்கு சென்ற போலீசார், சுடலைபழத்தை கைது செய்துவிட்டனர். கைதாகும்போது, ஒரு பையை கையில் வைத்திருந்தார்.. அந்த பையில், 1.48 கிலோ தங்க நகைகளும், அரை கிலோ வெள்ளிப் பொருட்களும், 50,000 ரூபாய் ரொக்கமும் இருந்திருக்கின்றன.. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்... இவர் எங்கே கொள்ளையடித்தாலும், கைரேகை பதிவாகாமல் இருக்க கிளவுஸ் போட்டுக் கொள்வாராம்..

 துணை நடிகை

துணை நடிகை

கையில் இரும்பு கம்பிகளையும் கொண்டு செல்வார்.. நெல்லை, தூத்துக்குடி, குமரி, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் என தமிழகத்தின் எந்த மாவட்டத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை.. எல்லா இடங்களிலுமே கைவரிசை காட்டி உள்ளார். இவர் காலையில் ஏதாவது ஒரு ரயிலில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம்.. இரவு எந்த ஊரில் அந்த ரயில் நிற்கிறதோ, அந்த ஊரில் இறங்கி, அங்கு பூட்டிக் கிடக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதுதான் இவரது வழக்கமாம்..

 துணை நடிகைகள்

துணை நடிகைகள்

அதேபோல, தனிஒருவனாகவே கொள்ளையை நடத்தி உள்ளார்.. ஒருத்தரைகூட கொள்ளையில் கூட்டாளியாக சேர்த்து கொள்வது கிடையாதாம்.. கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து, துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருப்பாராம்.. இத்தனை காலமும் திருடிய பணத்தை, நடிகைகளிடம்தான் இழந்ததாக வாக்குமூலத்தில் சொல்கிறார்.. சுடலைபழம் மீது தமிழ்நாடு முழுக்க மொத்தம் 50-க்கும் அதிகமான கேஸ்கள் இருக்கின்றன.. அப்படி இருந்தாலும் அதே ஊர்களுக்கு சென்று துணிந்து கைவரிசையை காட்டி வந்துள்ளார்.. இப்போது சார் ஜெயிலில் இருக்கிறார்..

 100 ஜோடி

100 ஜோடி

இப்படித்தான் சென்னையிலும் 2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. அவர் பெயர் சிவராமன்.. ஐடி ஊழியர்கள் நிறைந்த பூந்தமல்லி ஹைவேஸில்தான் இவர் கொள்ளையை அரங்கேற்றுவார்.. அதுவும் காதல் ஜோடிகள், காரில் இருக்கும்போது, போலீஸ் என்று சொல்லி ஏமாற்றி அவர்களிடம் பணம், நகை பறித்துள்ளார்.. இதுவரை 8 வருடத்தில், 100 ஜோடிகளுக்கு மேல், மிரட்டி பணம் பறித்துள்ளார்.. எப்படியும் ஒருநாளைக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணம் கிடைக்குமாம்.. கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கு மேல் இப்படியே கொள்ளையடித்து இருக்கிறார்..

காம்பியர்

காம்பியர்

இந்த நகைகளை அடகு கடையில் கொண்டுபோய், சிவராமன் விற்றுவிடுவார். அந்த பணத்தில் நடிகைகளிடம்தான் ஜாலியாக இருப்பார்.. இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.. முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்திருக்கிறார்.. இதில், அதிகளவில் 4 எழுத்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளினிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக வாக்குமூலமும் தந்திருந்தார்.

 4 எழுத்து நடிகை

4 எழுத்து நடிகை

இவர் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் இவரை திரும்பி பார்க்க மாட்டார்களாம்.. ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மூலம் தெரிந்து கொண்டதாக போலீசில் தெரிவித்திருந்தார் சிவராமன்... இவர் மீதும் தமிழகம் முழுவதும் 45 கேஸ்கள் இருக்கின்றன.. சிவராமன் தந்த அந்த வாக்குமூலம் அதிர்ச்சியே விலகாத நிலையில், அடுத்ததாக சுடலைப்பழம் அதே பாணியில் சிக்கி உள்ளார்..!!

 அய்யாப்பழம்

அய்யாப்பழம்

கைதான சுடலைப்பழமிடம் இருந்து ரூ.48,00,000/- மதிப்புள்ள நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இத்தனை வருட காலமும் அவர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், 131 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சுடலைப்பழத்தின் அப்பா பெயர் அய்யாப்பழம்.. அடிக்கடி போலீஸ் தேடி வர வாய்ப்புள்ளதால், சொந்த ஊருக்கு செல்லாமல் தவிர்த்து வந்தாராம் சுடலைப்பழம்.. இப்போது இவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

English summary
who is that actresses and Serial robber confessed to the Thirunelveli police, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X