பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு? பட்ட அவமானங்களால் உடைந்து பேசிய நாங்குநேரி சின்னத்துரை.. கலங்குதே
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன் சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன்சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் தான் சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் கடந்த ஆண்டு சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர். மேலும் தடுக்க போன சந்திராவையும் வெட்டிவிட்டு ஓடினர். இதனை பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தனர். இந்த வழக்கில் 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 படித்தபோது சின்னத்துரைக்கு இந்த கொடூர சம்பவம் நடந்தது. அதன்பிறகு அவர் மீண்டும் பள்ளி படிப்பை தொடங்கினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். இருவரின் படிப்பு செலவை அரசு ஏற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
சின்னத்துரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். சாதிய வன்கொடுமை தாக்குதல், தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் அவர் தனது தொடர்ந்து படிப்பை கைவிடாமல் இருந்ததை பலரும் பாராட்டினார்கள். நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் சின்னத்துரையை பாராட்டி சான்று மற்றும் உதவித்தொகை வழங்கினர். இந்நிலையில் தான் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை பங்கேற்று உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:
கடந்த வருடத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமும் 2 நாட்களும் ஆகிறது. நிறைய கஷ்டங்கள், அவமானங்களை நான் சந்தித்து வந்தேன். ஒவ்வொரு ஊரிலும் சாதி அடையாளத்துடனும், கையில் சாதி கயிறும் கட்டுகின்றனர். இதனால் தான் பள்ளியிலும் சாதி அடையாளங்களுடன் இருக்கின்றனர். பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு வாங்குறாங்க? என்று தெரியவில்லை. சாதி சான்று இருப்பதால் அனைவரும் சாதி பார்த்து பள்ளியில் தனித்தனியாக இருக்கின்றனர். இந்த மாதிரி நம் நாட்டில் எங்கேயும் இருக்க கூடாது. இதுதான் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும்'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications