Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடுமேய்க்க சென்ற போது பாலியல் சீண்டல்! தீக்கிரையாகிப் போன சிறுமி! திடுக்கிட்ட திருவள்ளூர்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே, கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக, 17 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மிரட்டல் விடுத்த 5 இளைஞர்கள் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள மாந்தோப்பில் வழக்கமாக மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, அந்த மாந்தோப்பிற்குள் மாடு மேய்க்க சென்றபோது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி தீக்குளிப்பு

சிறுமி தீக்குளிப்பு

ஆனால், அந்தப் பெண் இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோவை, சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என அந்த சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி, செய்வதறியாது திகைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, சம்பவம் நிகழ்ந்த மறுநாள், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த சிறுமியை உடனடியாக மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும், தனது மகள் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என தெரியாமல் சிறுமியின் பெற்றோர் திகைத்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணீர் வாக்குமூலம்

கண்ணீர் வாக்குமூலம்

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த சிறுமிக்கு நினைவு திரும்பியது. இதனையடுத்து, தனக்கு நேர்ந்த துயரத்தை, தனது சித்தி மற்றும் பாட்டியிடும் கூறி கண்ணீர்விட்டு கதறியுள்ளார் அந்த சிறுமி. தன்னை அந்த 5 இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தததை, வீடியோவாக எடுத்து மிரட்டியதால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

எஸ்.பி.யிடம் புகார்

எஸ்.பி.யிடம் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமியுடன் சென்று, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக சென்ற சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய 5 இளைர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பா. சிபாஸ்கல்யாண், சபந்தப்பட்ட அந்த 5 இளைஞர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+