திருவள்ளூரில் சினிமா டான்ஸ் பிரபலம் அசிங்கம்.. பணத்தாசை யாரை விட்டது? அந்த பையை வாங்கி பார்த்தால்?
சென்னை: சினிமா துறை வட்டாரத்தில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக வலுவான சந்தேகங்கள் வலம்வந்தவாறே உள்ளன. .. சமீபத்தில் 2 நடிகர்கள் கைதாகியும்கூட, அடுத்தடுத்த சினிமா பிரபலங்கள் கைதாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது சென்னையில்
தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.. போலீசாரின் இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது வெகுவாக தடுக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே போதைப்பொருட்கள் விற்பனை செய்பவரை கைது செய்வதுடன், அவரது சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது என அதிரடிகளையும் நம்முடைய தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது..

போதைப் பொருள் பறிமுதல்
அதுமட்டுமல்லாமல், போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுப்பது போன்ற செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த அதிரடியில்தான், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் சிக்கி சிறை சென்று வந்தது கடும் அதிர்ச்சியை தந்திருந்தது.. சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விற்ற நைஜீரியர்கள் சிலர் கைதானார்கள்.. இவர்கள் தமிழ்ப்படங்களில் துணை நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.
நடிகர், நடிகைகள்
இப்படி நடிக்க வரும்போது, சில சினிமா நடிகர், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விற்றார்களாம்.. பிரபல நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்ததாக, கைதானவர்களே அப்போது பரபரப்பு வாக்குமூலம் தந்திருந்தனர். இதையடுத்து, எல்லை கடற்படையினர் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்தினர்.
இதனால் கடந்த செப்டம்பர் மாதமும் ஒரு கும்பல் சென்னையில் சிக்கியது. போரூர் டோல் கேட், சர்வீஸ் சாலையில் வானகரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நடமாடி கொண்டிருந்த ஐயப்பன் தாங்கல் பகுதி சேர்ந்த சரண் ராஜ் (36), போரூரை சேர்ந்த ரெக்ஜின் மோன் (23), நூம்மல் ஜமுனா குமார் (27) ஆகிய 3 பேரையும் விசாரித்தனர்.
திரைப்பட உலகம்
அப்போது அவர்களிடம் மெத்தம்பெட்டமைன், கஞ்சா தெரியவந்தது.. அவர்களிடம் விசாரித்தபோது, வடபழனியை சேர்ந்த பிரபாகரன் (35) உள்ளிட்ட மேலும் 4 பேர் சிக்கியதுடன், அவர்களிடமிருந்தும் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரபாகரன் சினிமா உதவி இயக்குநராகவும், சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் நடிப்பவர் ஆவார்.. சினிமா நடிகராக பல படங்களில் நடித்து வந்தாலும், சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இப்படி நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தந்திருந்தார்.
இதனால் பிரபாகரன், மெத்தம்பெட்டமைனை சினிமா துறையை சேர்ந்த வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
இதோ இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பதற்றமடைந்த சிபிராஜ்
அப்போது பைக்கில் ஒருவர் வந்துள்ளார். அவரை நிறுத்தி போலீசார் விசாரித்தபோது அவரது பெயர் சிபிராஜை என்பது தெரியவந்தது. உடனே அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயன்றனர்..
உடனே சிபிராஜ் பதற்றமாகிவிட்டார்.. போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சிபிராஜை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 55 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 4 லைட்டர்கள், காஸ்ட்லி 2 செல்போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூரில் சினிமா நபர்
திருவள்ளூரில் விற்பனை செய்வதற்காக போதை பொருளை எடுத்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிபிராஜை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூர் பகுதியில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதாக பொதுமக்கள் புகார் சொல்கிறார்கள்.. ஏராளமான இளைஞர்கள் இந்த போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் போலீசார் இரும்புக்கரம் கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவேண்டும்’ என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டான்ஸ் கலைஞர்
கைதாகி ஜெயிலில் உள்ள சிபிராஜ், ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர்.. 22 வயதான சிபிராஜ், சினிமாடிவில் நடன கலைஞராக உள்ளார்.. பல்வேறு படங்களில் நடனமாடியிருக்கிறார்..
அதேபோல ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய டான்ஸ் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவது வழக்கமாகும்.. அதிலும், இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் டான்ஸ் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.. ஏகப்பட்ட நபர்கள் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர்கிறார்கள்.
பிரபலம் கைது
இவ்வளவு பிரபலமான நபர் கஞ்சாவில் கைதாகி சிறை சென்றிருப்பது அவரது ஃபாலோயர்ஸ்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.. சிபிராஜ் சினிமாவில் உள்ளதால், போதை பொருளை, திரையுலகில் வேறு யாருக்காவது சப்ளை செய்திருக்கிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications