அட மிருகமே! கடலை கொடுக்கச் சென்ற சிறுமி! காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொடூரன்! துவைத்தெடுத்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி காவல் துறையில் ஒப்படைத்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

அந்த வகையில் 7ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேற இருந்த கொடூரம் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. திருத்தணி அருகே தாமநெறி காலனி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டம் ஒன்று உள்ளது அந்த தோட்டத்தில் ஏழுமலை வேர்க்கடலை பயிர் செய்துள்ளார்.

7ஆம் வகுப்பு மாணவி

7ஆம் வகுப்பு மாணவி

இந்த நிலையில் நேற்று தோட்டத்தில் நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலரும் சிறுமி ஒருவரும் ஈடுபட்டு இருக்கிறார் அப்போது அங்கு பஞ்சாட்சரம் என்பவர் நிலக்கடலை வேண்டும் என கேட்டு இருக்கிறார். நிற்க முடியாத போதையில் தள்ளாடியபடி வந்த அவரிடம் சிறுமி ஒருவர் நிலக்கடலை கொடுப்பதற்காக அருகே சென்றிருக்கிறார்.

குடிபோதை கொடூரன்

குடிபோதை கொடூரன்

அப்போது குடிபோதை கண்ணை மறைக்க தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அந்த குடிபோதை பஞ்சாட்சரம் திடீரென சிறுமியை ஆளில்லாத வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் பயந்து போன அந்த சிறுமி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிடவே சத்தம் கேட்டு அருகில் இருந்து வந்தோர் பஞ்சாட்சரத்தை சரமாரியாக அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

 பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

மேலும் அச்சத்தில் உறைந்து போயிருந்த சிறுமியையும் அங்கிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+