குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் எதுவும் கிடைக்கலை? திருவள்ளூரில் இருந்து அரசுக்கு பறந்த கோரிக்கை
திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டம்' முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.. இதனால் ஏராளமானோர் நேரடி பலனை பெற்று வரும் நிலையில், திடீரென ஒரு புகார் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெடித்துள்ளது.. அத்துடன் இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கும் முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களை அரசு வழங்கி வருகிறது.. அந்தவகையில், கார்டுதாரர்களின் வசதியும், நன்மையும்தான் அரசினால் பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது..

அரிசி அட்டைதாரர்கள்
சமீபத்தில்கூட, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்ஸ்டாலின், "முதல்-அமைச்சரின் தாயுமானவர்" என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்திருந்தார்..
முதியோர்களும் மாற்றுதிறனாளிகள், ரேஷன் கடைகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.. அதிலும் வெயில், மழை காலங்களால் இவர்களால் ரேஷன் கடைகளுக்கு வந்து செல்ல முடிவதில்லை. அதனால்தான், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை நேரடியாக வினியோகம் செய்ய, 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்' துவங்கப்பட்டது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
அதன்படி, மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்கள் வாயிலாக ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படும் என்றும் இதன்மூலம் 20.4 லட்சம் முதியோர் மற்றும், 1.27 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவர் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தை செயல்படுத்த, ரூ.35 கோடி கூடுதலாக செலவு செய்ய உள்ளதாவும் நம்முடைய தமிழக அரசு தெரிவித்திருந்தது.
மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வீடு தேடி ரேஷன் பொருட்கள்
மொத்தமாக, 20 லட்சத்து 42657 மூத்த குடிமகன்களும், 1 லட்சத்து 27797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 21 லட்சத்து 70454 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், இவர்கள் அனைவரும் பெருத்த பலனை நேரடியாக அடைந்து வருகின்றனர். எனினும் ஒருசில நடைமுறை சிக்கல்கள் இந்த திட்டத்தில் ஆங்காங்கே வெடித்து வருகிறது..
திருவள்ளூர் மாவட்டம்
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில், பல மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் பலனை பெற முடியவில்லையாம்.. அங்குள்ள மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காமல், உணவு துறையினர் அலைக்கழித்து வருவதாக புகார் ஒன்று முளைத்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து கூறும்போது, "இந்த திட்டம் துவங்கி இப்போது 4 மாதங்கள் ஆகிவிட்டன.. ஆனாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல மாற்றுத்திறனாளிகள் இதன் பயனை பெற முடியவில்லை.
மாற்றுத் திறனாளிகள்
ரேஷன் கடைகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழங்கிய அடையாள சான்றிதழ்களை மண்டல உணவுப் பொருள் அலுவலகத்தில் ஒப்படைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதனால் ஒப்புதல் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் மண்டல அலுவலகங்களுக்கு சென்றால், உணவுத்துறை அதிகாரிகள் அவர்களை அலைக்கழிக்கிறார்களாம்.. தேவையற்ற சான்றிதழ்களை கேட்கிறார்களாம்.. இதனால் அவசர உதவி பெற முடியாமல் அலைய வேண்டியிருப்பதால், இது உண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேதனையை தருகிறது..
தமிழக முதல்வர்
எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் கேட்கப்படாமல், நேரடியாக வீட்டு வாசலுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும், அரசின் இந்தத் திட்டம் முறையாக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..












Click it and Unblock the Notifications