டீயுடன் பிஸ்கெட்டை நனைத்து சாப்பிட்ட குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறலால் பலி! திருவள்ளூரில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டீயுடன் பிஸ்கெட்டை நனைத்து சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை குருவராஜா கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஹரி கிருஷ்ணன் (33). இவரின் மனைவி அமுலு (27).

crime tiruvallur death

இந்த தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் இருவருக்கும் 3 வயதில் வெங்கடலட்சுமி என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த குழந்தைக்கு அமுலு, டீயுடன் பிஸ்கெட்டை தோய்த்து ஊட்டியுள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிய அமுலு, அந்த குழந்தையை செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த தகவலை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறினர். குழந்தையின் இறப்பை அறிந்த போலீஸார், மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+