எலுமிச்சை மரத்தில் ஆசையாக ஏறிய இளம் மனைவி.. குறுக்கே இரும்பு கம்பியை பிடித்து.. ஆடிப்போன திருவள்ளூர்
திருவள்ளூர்: வீட்டு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை அகற்றக்கோரி பலமுறை மின்வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடைசியில் ஒரு உயிரே பறிபோய்விட்டதாக கூறி சாலை மறியலிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை தந்து வருகிறது.
மக்கள் புழங்கக்கூடிய பகுதிகளில், குறுக்கே பாயும் கரண்ட் கம்பிகளால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்தது.. புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் - தீபிகா தம்பதிகள் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. இப்போது தீபிகா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்..

இளநீர்: வீட்டின் பின்புறத்திலிருந்து மனைவிக்கு இளநீா் பறிப்பதற்காக, தென்னை மரத்தில் ஆனந்தராஜ் மரம் ஏறியிருக்கிறார்.. அப்போது மரத்திலிருந்து திடீரென தவறி விழுந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக மரத்தின் பக்கத்தில் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்த மின்ஒயரில் சிக்கி, பரிதாபமாக இறந்துவிட்டார்.
சமீபத்தில்கூட நாகர்கோவிலிலும் மின்ஒயர் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.. சம்பவத்தன்று துவைத்த ஈர துணிகளை காயப்போட, வீட்டின் பின் பகுதிக்கு சென்ற நீலா, இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை போட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அலறி துடித்து கீழே விழுந்தார். மனைவியின் அலறல் கேட்டு ஓடிச்சென்ற ரத்தினமணி அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவருமே இறந்துவிட்டார்கள்.
லோகேஸ்வரி: இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் லோகேஸ்வரி என்ற பெண்ணின் உயிரும் பரிதாபமாக போயிருக்கிறது.. வரதாபுரம் கிராமத்தை சேர்ந்த 26 வயது லோகேஸ்வரி, கணவர் சந்தோஷ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிலுள்ள எலுமிச்சை மரத்தில் எலுமிச்சை பழம் பறிக்க முயன்றுள்ளார் லோகேஸ்வரி.. அப்போது, வீட்டின் மாடியில் ஏறி இரும்பு கம்பியை கொண்டு, எலுமிச்சை பழத்தை பறிக்க முயன்றார்.
அப்போது, வீட்டின் மாடிக்கு அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது லோகேஸ்வரி கையில் வைத்திருந்த இரும்பு கம்பி பட்டுவிட்டது. இதில், மின்சாரம் தூக்கியடிக்கப்பட்டு படுகாயமடைந்தார் லோகேஸ்வரி.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லோகேஸ்வரியின் உயிர் பரிதாபமாக போய்விட்டது.
கண்டுகொள்ளாத மின்வாரியம்: ஆனால், இந்த தாழ்வாக சென்ற மின் கம்பியை அகற்றக்கோரி பலமுறை மின்வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டதாம்.. ஆனாலும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் லோகேஸ்வரியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. அத்துடன் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதானம் செய்தனர்.. லோகேஸ்வரியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications