• search
திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் புருஷனும்.. உன் பொண்டாட்டியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. குடி முழுகி போச்சே.. பரபரப்பு வீடியோ

கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: "என் புருஷனும், உன் பொண்டாட்டியும் கல்யாணிக்க பண்ணிக்க போறாங்க"ன்னு சொன்னதை கேட்டதும் ஷாக் ஆயிட்டேன்.. யாரெல்லாம் வட்டிக்கு பணம் வாங்கறாங்களோ, அவங்க பொண்டாட்டிங்க எல்லாருமே தன்னை மாமான்னு கூப்பிட்டாதான் பாபு பணம் தருவான்.. அப்படித்தான் என் மஞ்சுளாவும் அவனை மாமான்னு கூப்பிட்டாள்.. இப்ப என் குடியே கெட்டு போச்சு.. வட்டி பணம் வாங்க வீட்டுக்கு வந்தவன் என் மஞ்சுளாவை கவுத்துட்டான்" என்று இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முன்பு மரண வாக்குமூலம் போல வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்தவர் சரத்குமார்.. இவருக்கு இன்னொரு பெயர் குட்டி.. கறி கடையில் வேலை பார்த்து வருபவர்.. மஞ்சுளா என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்தார்.. 8 வருட காதல் இது.. மஞ்சுளா மீஞ்சூரை சேர்ந்தவர்.. அவரையே கல்யாணம் செய்து அங்கேயே வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவசர தேவைக்காக எண்ணூரை சேர்ந்த பாபுவிடம் கந்துவட்டிக்கு பணம் குட்டி வாங்கியுள்ளார்... ஆனால் சந்தர்ப்ப சூழலால் பணத்தை திரும்ப தர முடியவில்லை.. அதனால் வட்டிக்கு பணம் தந்த பாபு வீட்டிற்கு வந்த பணம் கேட்க ஆரம்பித்தார்.

ராத்திரியானாலும் சரி.. அங்கேயே இருங்க.. யாரும் கிளம்பி போகக் கூடாது.. ஜெ. பாணியில் ஜெகன்!ராத்திரியானாலும் சரி.. அங்கேயே இருங்க.. யாரும் கிளம்பி போகக் கூடாது.. ஜெ. பாணியில் ஜெகன்!

மஞ்சுளா

மஞ்சுளா

வரவேண்டிய வட்டி காசை வாங்க வந்தபோது, மஞ்சுளாவுக்கும் பாபுவுக்கும் லவ் வந்துவிட்டது.. விஷயம் தெரிந்து மனம் உடைந்த குட்டி இதனை கண்டித்தார்.. ஆனால் மஞ்சுளா கேட்கவில்லை.. 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், குட்டி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவலறிந்து மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பிறகு இது சம்பந்தமான விசாரணையையும் ஆரம்பித்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்போதுதான், குட்டியின் வீடியோ ஒன்று செல்போனில் இருந்தது.. கிட்டத்தட்ட மரண வாக்குமூலம்போல தற்கொலைக்கு முன்பு குட்டி அதில் பேசியிருந்தார். மொத்தம் 4 வீடியோ இருந்தது. அதில்,"என் பேர்தான் குட்டி.. ஜாகீர் பாய் கறி கடையில் வேலை செய்றேன்.. வீட்டு கஷ்டத்துக்காக பாபுவிடம் வட்டிக்கு பணம் வாங்கினேன்.. அவன் முன்னாள் கவுன்சிலர்.. அவன் பொண்டாட்டி பேர் கிரிஜா.. இவங்களுக்கு 3 குழந்தைங்க இருக்காங்க.. பணம் வாங்க வரும்போதுதான் என் பொண்டாட்டி கிட்ட பழகி வந்திருக்கான்.. இந்த விஷயத்தை எனக்கு சொன்னதே கிரிஜாதான்.

திருந்தவில்லை

திருந்தவில்லை

என் புருஷனும், உன் பொண்டாட்டியும் கல்யாணிக்க பண்ணிக்க போறாங்க, உனக்கு தெரியாம அவங்க பழகிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அதுக்கப்புறம் என் பொண்டாட்டிக்கிட்ட புரிய வெக்கிறோம்னு சொல்லி பாபு தங்கச்சி, கிரிஜா வீட்டுக்கு வந்து அவளை அடிச்சாங்க.. அப்பவாவது மஞ்சுளா திருந்துவான்னு நினைச்சேன்.. ஆனால் பாபு என் பொண்டாட்டியை விடல.. தினம் வந்து தொல்லை பண்ணிட்டே இருக்கான்.. என் சாவுக்கு கந்துவட்டி பாபுவும் அவன் குடும்பமும்தான் காரணம்.. யாருக்கு வட்டிக்கு பணம் தந்தாலும் அவங்களுடைய மனைவியின் போன் நம்பரை தந்தால் மட்டும்தான்பாபு பணம் தருவான்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

அப்பதான் அக்ரிமெண்ட்டில் கந்துவட்டி தருவதாக எழுதப்படாத ஒப்பந்தமும் போடுவான்.. இப்படி வட்டிக்கு வாங்குபவர்களின் எல்லார் பொண்டாட்டிங்களும் பாபுவை மாமான்னுதான் கூப்பிடணும்.. அப்பதான் கடன் தொகை கைக்கு வரும்.. மஞ்சுளாவும் பாபுவை மாமா என்று கூப்பிட ஆரம்பிச்சாள்.. அந்த வட்டி காசை வாங்க வந்துதான் என் குடும்பத்தை நாசம் பண்ணிட்டான் என்று சொல்லி உள்ளார்.

விசாரணை

விசாரணை

இந்த வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.. இந்த வீடியோவில் குட்டி சொல்லி உள்ளவை அனைத்தும் உண்மைதானா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்... தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை கொஞ்ச நாளைக்கு இல்லாமல் இருந்தது.. இப்போது திரும்பவும் தலைதூக்கி பல குடும்பங்களை அழிக்க தொடங்கிவிட்டது கவலையை அளித்து வருகிறது.

English summary
young man commits suicide after his death confession due to kanthu vatti
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X