சென்னையில் இருந்து வந்தவாசிக்கு வண்டியில் வந்த தாய்-மகன்.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மனைவி மேகராணி என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வந்தவாசி - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் வந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு கடந்த ஜனவரி 12ம் தேதியில் இருந்தே விடுமுறைவிடப்பட்டுள்ளது- அதேநேரம் அரசு ஊழியர்களை பொறுத்தவரை ஜனவரி 14ம் தேதியில் இருந்து விடுமுறை விடப்பட்டது. பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனங்களிலேயே இந்த முறை அதிக அளவில் பயணித்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி மேகராணி (வயது 53). இவர்களுக்கு 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கிறார்கள். மணிகண்டன் சென்னையில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடன் தாயார் மேகராணி தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கலையொட்டி தாயாருடன் மணிகண்டன் ஸ்கூட்டரில் புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வந்தவாசி - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் பாதிரி கிராமம் அருகே வந்த போது, வேகத்தடை மீது ஸ்கூட்டர் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்து வந்த மேகராணி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மேகராணி உயிரிழந்தார். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செய்யாறு பகுதியைச் சேர்ந்த வக்கீல் கணேசன் என்பவர் நேற்று அதிகாலை காஞ்சீபுரம்-கலவை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாகச் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட் டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் செய்யாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்,.. இதில் அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications