அண்ணாமலையோடு செல்பி.. அண்ணாமலையார் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு! தகராறு செய்த பாஜக நிர்வாகி கைது
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 3,800 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பாஜக நிர்வாகியின் வீடு இடிக்கப்பட்டதை கண்டித்து போலீசாரை ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டு தலைமறைவான பாஜக நிர்வாகி சங்கரை போலீசார் திருப்பதியில் கைது செய்து உள்ளார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள வடக்கு கோபுரத்தை கடந்த 17 ஆம் நூற்றாண்டில் கட்டி முடித்தவர் பெண் சித்தர் அம்மணி அம்மாள். இவரும் கட்டுமானப் பணியாளர்களும் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 108 தூண் மண்டபம் கட்டப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மண்டபம் மற்றும் அதற்கு அருகே இருந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. கடந்த 2005 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்துக்கே அந்த நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தின் 3,800 சதுர அடியில் சங்கர் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தை கட்டி இருந்தார். இவர் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவராவார்.

அண்ணாமலையார் கோயில் நோட்டீஸ்
அதில் 2 மாடிகளை கொண்ட வீடு மட்டுமின்றி, ஒரு குடோன் மற்றும் தனது அலுவலகத்தையும் கட்டி இருந்தார் சங்கர். இதையடுத்து அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சங்கரின் மனைவி தீபாவுக்கு நோட்டீஸை அனுப்பி இருந்தது. அதை எதிர்த்து சங்கர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆதாரம் இல்லை
இது தொடர்பான வழக்கு அறநிலையத்துறை நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது சங்கர் ஆஜராகவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி சங்கர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இடிக்கப்பட்ட வீடு
அதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் 3,800 சதுர அடி பரப்பளவில் பாஜக நிர்வாகி கட்டி இருந்த வீடும் அவரது அலுவலகமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பழமைவாய்ந்த அம்மணி அம்மாள் தங்கி இருந்த 108 தூண் மண்டபமும் இடிக்கப்பட்டது.

பாஜக நிர்வாகி மிரட்டல்
இதற்கிடையே அங்கு வந்த அம்மணி பாஜக நிர்வாகி சங்கர் அம்மாள் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அத்துமீறி கோயில் இடத்திற்குள் நுழைந்ததாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திகேயன், ஏழுமலை, காளியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பாஜக நிர்வாகி கைது
இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி சங்கர், அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திருப்பதில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
திருவண்ணாமலையில் திடீர் சிக்கல்.. ஆனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைய ஒரு மாற்றம்.. என்ன நடந்தது தெரியுமா -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
சொப்பனத்திலும் கண்டில்லா சாரே! ஈரான் போரால் அண்ணாமலையாருக்கே சிக்கல்! மனம் வெதும்பும் பக்த கோடிகள்!











Click it and Unblock the Notifications