திருவண்ணாமலையே முழிக்குது.. மனைவிக்கு "பிளையிங் கிஸ்" தந்த கணவன்.. ஆஸ்பத்திரியில அட்மிட்.. அட ஆண்டவா
திருவண்ணாமலை: செந்தமிழ்ச்செல்வன் பெரிசா ஒன்னும் தப்பு பண்ணிடல.. தன்னுடைய மனைவிக்கு "பிளையிங் கிஸ்" தந்தாராம் .. இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார்... என்னவா இருக்கும்?
திருவண்ணாமலை செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்... இவர் ஒரு டாக்டர்.. ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவராக நாகை மாவட்டம் தேவூரில் சொந்தமாக கிளினிக் வைத்திருக்கிறார்.

தம்பதி: இவரது மனைவி பெயர் சுதா.. இவரும் டாக்டர்தான்.. தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு இவர்களுக்கு கல்யாணமாகி உள்ளது.. இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான்.
ஆனால், செந்தமிழ்செல்வனுக்கும், சுதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. எனவே, கடந்த 10 வருடங்களாகவே இந்த தம்பதியினர் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
டைவர்ஸ்: இதைத்தவிர 3 மாதங்களுக்கு முறைப்படி கோர்ட்டில் டைவர்ஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி மகனை பார்ப்பதற்கு, செந்தமிழ்ச்செல்வனுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், மகனை சந்திப்பதற்கு மனைவி சுதா அனுமதிப்பதில்லையாம்.
இப்படிப்பட்ட சூழலில், சுதா டாக்டராக பணிபுரியும் தேவூர் மருத்துவமனைக்கு செந்தமிழ்செல்வன் அடிக்கடி சென்று, சுதாவிடம் தொந்தரவு செய்து வந்தாராம்.. இதனால் ஆத்திரம் அடைந்த சுதா, செந்தமிழ்செல்வன் மீது போலீசில் புகார் தந்திருக்கிறார்.. செந்தமிழ்ச்செல்வன் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தும். தரக்குறைவாக பேசியும், தன்னை அடித்து உதைத்தும், உடைகளை கிழித்தும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கீழ்வேளூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தேவூர் மருத்துவமனை: இதனிடையே, செந்தமிழ்ச்செல்வன், மீண்டும் தேவூர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.. அப்போது அவரை சுதா மற்றும் அங்குள்ள பணியாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் செந்தமிழ்ச்செல்வனுக்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த செந்தமிழ்ச்செல்வன், தற்போது நாகை அரசு தலைமை மருத்துவமனையில், தீவிரமான சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வன் சொல்லும்போது, "என்னுடைய மாமனார், என்னிடமிருந்து 200 பவுன் நகையை திருடிக்கொண்டுவிட்டார்.. என் மனைவியையும் என்னுடன் சேர விடாமல் தடுத்து வருகிறார். இதனால் என்னை ஆள் வைத்து மிரட்டுகிறார் என் மனைவி.. என்னை கொலை செய்துவிடுவதாக சொல்கிறார்.
நோயாளி: சம்பவத்தன்று, நான் தேவூர் மருத்துவமனைக்கு நோயாளியாக சென்றிருந்தேன். அப்போது எனக்கு யாருமே சிகிச்சை தரவில்லை. நோயாளி என்றுகூட பார்க்காமல் என்னை அடித்து தாக்கிவிட்டார்கள்.
இது நியாயமா? என்று சுதாவிடம் நான் கேட்டதற்கு, நமக்குதான் டைவர்ஸ் ஆகிவிட்டதே... தினமும் ஏன் இந்த மருத்துவமனைக்கு வர்றீங்க? எதுக்காக எனக்கு ப்ளையிங் கிஸ் கொடுக்கிறீங்க? இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதீங்க" என்கிறார். இது சம்பந்தமாக போலீசில் புகார் தந்துள்ளேன்" என்கிறார் செந்தமிழ்ச்செல்வன்.
மாறி மாறி புகார்: இப்படி ஆளுக்கு ஒருபக்கம் மாறி மாறி புகார்களை கூறியிருப்பது, பரபரப்பை மட்டுமல்லாமல் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. உண்மையிலேயே, செந்தமிழ்ச்செல்வனை மனைவி சுதா தாக்கினாரா? அல்லது மனைவிக்கு செந்தமிழ்ச்செல்வன் பிளையிங் கிஸ் தந்தாரா? என்றெல்லாம் தெரியவில்லை. இருவருமே புகார் தந்துள்ளதால், கீழ்வேளூர் போலீசார்தான், இதுகுறித்து உண்மைத்தன்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமா, டைவர்ஸ்தான் ஆயிருச்சே??? உண்மையிலேயே செந்தமிழ்ச்செல்வன் சுதாவுக்கு ஃபிளையிங் கிஸ் தந்திருப்பாரோ?? தெரியலையே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications