திருவண்ணாமலையில் மண் சரிவு.. மண்ணில் புதைந்த வீடுகள்.. குழந்தைகள் உள்பட 7 பேர் நிலைமை என்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு, 3 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் கடலூரில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது.

இன்று இரவு வரை மழை விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்ததால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், ஆறுகளில் தண்ணீர் மட்டம் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருசில பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. திருவண்ணாமலையில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடுகளில் 7 பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தான் இந்த பாறை சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, இவர்களது குழந்தைகள் கவுதம், இனியா மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகன், மகள்கள் தேவிகா, வினோதினி இன்னொரு பெண் என மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
7 பேரையும் காணாததால் அவர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மண் சரிவுக்கு முன்பு ராஜ்குமார் செல்போன் எண்ணில் ஒருவர் பேசியதாகவும், ஆனால் மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெரிய பாறையை அகற்றினால் தான் மீட்பு பணியை தொடர முடியும். எனவே மீட்பு பணியை தொடங்குவதில் சிக்கல் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய மீட்பு படையினர் சற்று நேரத்தில் அங்கு வந்துவிடுவார்கள் என்று தகவல் வெளியாகிள்ளது. மேலும் அப்பகுதியில் மலை அடிவாரத்தில் இருப்பவர்களை, வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications