'ஓர் கன்னித் தமிழே வா'.. சொந்தமாக பாட்டு எழுதி ராகத்துடன் மேடையில் பாடிய அமைச்சர் எ.வ.வேலு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சொந்தமாக ஒரு பாட்டெழுதி அதை ராகம் போட்டு அனைவர் முன்னிலையிலும் பாடி அசத்தினார்.
தமிழ் மொழியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தமிழ் மீது கொண்ட பற்றால் பள்ளிப்பருவத்திலேயே தாம் பாடல்கள் எழுதிய வரலாறு உண்டு எனவும் கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் எ.வ.வேலு நடத்தும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அருணை என தமிழில் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் திருநாள்
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் போது திருவண்ணாமலையில் தமிழர் திருவிழாவை நடத்துவது அமைச்சர் எ.வ.வேலுவின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான தமிழர் திருவிழாவை நேற்று நடத்திய அவர் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரையும் விழாவுக்கு அழைத்திருந்த அமைச்சர் எ.வ.வேலு, அவர்கள் முன்னிலையில் பேசுகிற போது தமிழ் மொழியின் சிறப்புகளை பட்டியலிட்டார்.

ஓர் கன்னித் தமிழே வா
மேலும், தமிழ் மீது கொண்ட பற்றால் தமது பள்ளிப்பருவத்திலேயே பாடல்கள் இயற்றியுள்ளதாக கூறிய அவர் திடீரென 'ஓர் கன்னித் தமிழே வா' என உரக்க பாட ஆரம்பித்துவிட்டார். கேலி கிண்டல்களை பற்றிக் கவலைப்படாமல் தனது இஷ்டத்துக்கு ஒரு ராகத்தை உருவாக்கி தாம் சொந்தமாக எழுதிய பாடல் வரிகளை பாடினார். ஆயிரம் நிலவே வா என்ற சினிமா பாடல் தான் தனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக் கூறினார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு என்ற பெயர் பெரும் வரலாற்றை படைத்திருப்பதாகவும் இந்தப் பெயரை சூட்டுவதற்காக நடைபெற்ற போராட்டங்கள், தியாகங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். தமிழ் மொழியின் சிறப்புகளை பட்டியலிட்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழர் திருநாள் விழாவில் கலந்துகொண்ட போது வழக்கமான கட்சி கரை வேட்டியை தவிர்த்து பட்டு வேட்டி அணிந்திருந்தார்.

தமிழ் பெயர்கள்
இதனிடையே அமைச்சர் எ.வ.வேலு, தனது இரண்டு மகன்களுக்கும் கம்பன், குமரன் என தூய தமிழ் பெயர்களை சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாம் நடத்தி வரும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அருணை என தமிழில் பெயர் சூட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications