அப்பாடா.. செஞ்சியை விட்டு நகர்ந்து திருவண்ணாமலையை நெருங்கி விட்டார் பெருமாள்
இன்று திருவண்ணாமலைக்குள் கோதண்டராமர் சிலை நுழைகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: இப்போ பெருமாள் செஞ்சியை விட்டு நகர்ந்து திருவண்ணாமலைக்கு வந்துட்டார்!!
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன.

வீடுகள், கடைகள்
பின்னர் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்து சென்றது. பிறகு 10 நாளுக்கு முன்பு, செஞ்சி கோட்டைக்கு சிலை நுழைந்தது. ஆனால் செஞ்சிக்கோட்டை சுற்றுச்சுவரை இடித்த பின்னர் தான் எடுத்து செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் திரும்பவும் சிக்கல் வந்தது.

பாதை சரி செய்யப்பட்டது
எனவே சிலையின் அகலத்தை குறைத்து மாற்று பாதையில் பெருமாளை கொண்டுபோனால், அங்கே இருந்த ஒரு சின்ன பாலத்தினால் மீண்டும் தடை பட்டது. பாலத்துக்கு பக்கத்திலேயே இரும்பு தகடுகள் மூலம் பாதையை சரி செய்து அதில் சிலையை எடுத்து சென்றார்கள்.

டயர்கள் வெடித்தன
இப்போது 240 டயர்கள் கொண்ட லாரி, மெல்ல மெல்ல தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. திண்டிவனம், சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்கு பெருமாள் வந்து கொண்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லையில், வேடந்தவாடி கூட்ரோடு அருகே வந்தபோது, லாரியின் டயர்கள் திரும்பவும் டமார் என அடுத்தடுத்து வெடித்தன.

வருகிறார் பெருமாள்
அதனால் நேற்று முழுவதும் அதனை சரி செய்யும் பணி நடந்தது. புதிய டயர்கள் மாற்றப்பட்டு, இன்று காலை அங்கிருந்த பெருமாள் சிலை புறப்பட்டுள்ளது. மங்கலம் வழியாக திருவண்ணாமலை வந்து கொண்டிருக்கிறார் பெருமாள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications