திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட் பண்ணிக்கோங்க
திருவண்ணாமலை: கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு கார்த்திகை தீபா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்களுக்காக காவல்துறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கடந்தாண்டை போல இந்தமுறையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த இடர்பாடுகளும் இல்லாமல் காவல்துறை அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தாண்டு பக்தர்கள் அதிகளவு வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

13 ஆம் தேதி தீபம் நிகழ்வு நடக்கிறது. 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பௌர்ணமி உள்ளது. அதனால் இந்தமுறை கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டம் நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடந்தமுறை 10 தற்காலிக பேருந்து நிலையங்களை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தமுறை அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சுமார் 9 சாலைகள் இணைக்கும். அந்த ஒவ்வொரு சாலையிலும் ஒரு இடத்தில் போதுமான அளவுக்கு பேருந்துகளை நிறுத்திக் கொள்தவற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அவரவர் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் திருவண்ணாமலை வருவார்கள். கடந்த முறை 75 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. இந்தமுறை அந்த எண்ணிக்கையை உயர்த்தி, 120 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்திருக்கிறோம்.
வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் தங்கள் வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பதை விரைவில் அறிவிப்போம். மக்களுக்கு அந்த இடத்தின் முகவரி, கூகுள் மேப் லொகேஸனோடு தகவல் வெளியிடுவோம். சமூகவலைதளங்கள் மூலமாகவும் இந்த அறிவிப்பை பரப்புவோம். வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பதில் மக்களுக்கு குழப்பம் இருக்கும்.
அதனால் லொக்கேஷனுடன் அனுப்புவது திருவண்ணாமலைக்கு வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான மக்கள் கூகுள் மேப் பயன்படுத்துவதால் லொக்கேஷனுடன் பார்க்கிங் பகுதிகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். திருவண்ணாமலை டவுன், கிரிவலப்பாதை, மாட வீதி ஆகிய இடங்களில் பைக் ரோந்து குழுவினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளோம்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும். சிலர் பக்தர்களை மிரட்டி பணம் கேட்பதாகவும் புகார் வந்துள்ளது. அதனால் 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதைக்கு 1 கி,மீக்கு ஒரு பறக்கும் படை பணியமர்த்தவுள்ளோம். மக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த பறக்கும் படை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை பார்கிங்குக்கு போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் காவல்துறை அறிவிக்கும் இடங்களில் மட்டுமே தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை தவறான இடங்களில் பார்க்கிங் செய்வதால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
அனைத்து பகுதிகளிலும் காவல்துறை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். எனவே காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.












Click it and Unblock the Notifications