திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைசாக “காதில்” சொன்ன ஸ்டாலின்! வெடித்து “சிரித்த” பொன்முடி - என்னவா இருக்கும்? நீங்களே பாருங்க!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடியிடம் காதில் ஏதோ சொல்ல அவர் வாய்விட்டு சிரித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி திருவண்ணாமலை சென்றார்.

திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.

நன்றி அதிபரே! உங்க பெட்லதான் படுத்திருக்கேன் - கோட்டாபயா வீட்டிலிருந்து வீடியோ வெளியிட்ட இலங்கையர் நன்றி அதிபரே! உங்க பெட்லதான் படுத்திருக்கேன் - கோட்டாபயா வீட்டிலிருந்து வீடியோ வெளியிட்ட இலங்கையர்

இல்லம் தேடி கல்வி திட்டம்

இல்லம் தேடி கல்வி திட்டம்

இதை அடுத்து கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கருணாநிதி சிலை

கருணாநிதி சிலை

அதன் பின்னர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவுவாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

2 வது நாளான நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1.71 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அத்துடன் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த 91 புதிய கட்டிடங்களை அவர் திறந்துவைத்து, 246 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சிரிக்க வைத்த முதலமைச்சர்

சிரிக்க வைத்த முதலமைச்சர்

இந்த விழாவில் மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அருகில் அமர்ந்திருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் காதில் மெதுவாக ஏதோ பேசினார். அதை கேட்டவுடன் அமைச்சர் பொன்முடி மேடையிலேயே வாய்விட்ட சிரித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கையால் வாயை மறைத்தவாறு வேறு பக்கம் திரும்பி சிரித்தார். இதனைக் கண்ட அதிகாரிகளும் என்னவென்று கேட்டு சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் பொன்முடியும் அதை பகிர்ந்து "தலைவர்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Ponmudi laugh after CM MK Stalin told him some thing in stage : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடியிடம் காதில் ஏதோ சொல்ல அவர் வாய்விட்டு சிரித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X