நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே! ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு குவியும் பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில், ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநில பத்கர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

நினைத்தாலே முக்தி தரும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.

Pournami girivalam in Tiruvannamalai starts this evening

பல்வேறு புராண வரலாறுகள் கொண்ட இந்த சிறப்பு மிக்க கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும், பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக குவிந்து வருவது வழக்கம். முக்கியமாக கோவிலின் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கன பக்தர்கள் கிரிவலமாகச் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கம்.

வளர்பிறை பிரரோஷம்

அண்ணாமலையார் திருக்கோவிலில், ஆவணி மாத வளர்பிறை பிரரோஷ வழிபாடு நேற்று விமர்சையாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு அரிசி, மாவு, தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு பூக்களால் அரலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பிரோதஷ தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை கிரிவலம்

இந்நிலையில், ஆவணி மாத பவுர்ணமிக்கான கிரிவலம் இன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.20 மணிக்கு தொடங்கி, நாளை மாலை 4.20 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் குறிக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட இந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

கிரிவலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துள்ளது. கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+