ஆரணியில் பரிதாபம்...கார் டயர் வெடித்து லாரி மீது மோதல்...குல தெய்வம் கோயிலுக்கு சென்ற 6 பேர் பலி
திருவண்ணாமலை: போளூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விவரம் பின்வருமாறு:-

வேலுார் மாவட்டம் விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த10 பேர் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். இன்று பிற்பகல் வேலுார் - திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து வேலுார் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக திடீரென கார் மீது மோதியது. லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் காரில் பயணம் செய்த 3 மாத குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர், சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications