திருவண்ணாமலை கிரிவலம் வந்த சினேகா- பிரசன்னா! செருப்பு அணிந்து வந்ததால் சர்ச்சை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற சினேகாவும் பிரசன்னாவும் செருப்பு அணிந்து கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்களும் விமர்சித்துள்ளனர்.
புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சினேகா. இவர் விரும்புகிறேன் என்ற படத்தில் அறிமுகமானார். இவருடைய அழகு, புன்னகை, நடிப்புத் திறமை உள்ளிட்டவைகளால் அவர் அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை அங்கு பணியாற்றினார். சினேகா, கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், பிரசன்னா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். அந்த வகையில் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
தற்போது சில ரியாலிட்டி ஷோக்களில் சினேகா ஜட்ஜாக இருக்கிறார். அவருடைய அக்கா காஸ்ட்யூம் டிசைனர். அவர் சினேகாவின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். அது போல் திரையுலகில் உள்ள சில ஹீரோயின்களுக்கும் பார்ட்டி வேர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்து கொடுக்கிறார்.
கீது பொடிக்ஸ் என ஒரு துணிக் கடையையும் நடத்தி வருகிறார். தனது அக்காவை போல் சினேகாவும் ஒரு துணிக் கடையை தொடங்கிவிட்டார். இங்கு திருமணத்திற்கு தேவையான ஜவுளி எல்லாம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகாவும் பிரசன்னாவும் பங்குனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் கிரிவலம் செல்வதற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் மாஸ்க் அணிந்தபடியே சென்றனர். ஆனால் அங்குள்ள சிவலிங்கங்களில் வழிபடும் போது மாஸ்க்கை எடுத்துவிட்டதால் ரசிகர்களின் கண்களில் பட்டனர். அவர்களுடன் செல்பி எடுத்தனர்.
அது போல் திருநங்கைகளுடனும் நெருக்கமாக சினேகா செல்பி எடுத்தது, அவரை பாராட்டுக்குள்ளாக்கியுள்ளது. அவர்களை மனிதர்களாக மதிக்கும் குணத்தை குறைந்தபட்சம் இது போல் பிரபலங்கள் மூலமாவது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கிரிவல பாதையில் தேங்காய்களை உடைத்து பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் இருவரும் செருப்பு அணிந்து கொண்டு கிரிவலம் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பொதுமக்கள் செருப்பில்லாமல்தான் நடப்பர். இரவு நேரத்தில் வெயில் கூட இருக்காது, அப்புறம் ஏன் செருப்பணிய வேண்டும் என பலர் கேட்கிறார்கள்.
அது போல் இவர்களுக்கு வெறுங்காலில் நடக்க முடியாவிட்டால் டெம்பிள் சாக்ஸ் அணிந்திருக்கலாமே என்கிறார்கள். மேலும் அந்த செருப்பு இந்த கிரிவலத்தில் போட்டு நடப்பதற்காகவே வாங்கியிருப்பார்கள். வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடந்து நடந்து கால் பாதங்கள் லேசாகி இருக்கும். இதனால் சிறிய கற்கள் குத்தினாலும் பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர்கள் எங்குமே பயன்படுத்தாத செருப்பை அணிந்திருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications