Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவசமாதி.. ஆரணி சிறுவன் பிரேதப் பரிசோதனை.. மீண்டும் தியான நிலையில் உடல் அடக்கம்

ஜீவசமாதி அடைந்த சிறுவனின் உடலை தோண்டி எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்-வீடியோ

    ஆரணி: உயிரோடு இருக்கும் சிறுவனை சஜீவ ஜல சமாதி செய்யணும் என்று ஐடியா கொடுத்த மகா புத்திசாலியான சாமியார் பழனியை போலீசார் கைது செய்து கொத்தோடு அள்ளி கொண்டு போனார்கள். மேலும் சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து, அங்கேயே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது!

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகில் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் பெயர் தனநாராயணன். வயது 16. நன்றாக படிக்க கூடியவனாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 465 மார்க் எடுத்திருக்கிறான். இவனுக்கு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் அதனால் அவர் ஆன்மீக வழிபாட்டில் எப்போதும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    சிறுவன் சடலம்

    சிறுவன் சடலம்

    இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி தனநாராயணன் வீட்டிற்கு அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தனநாராயணனை மீட்டனர். அப்போது 108 ஆம்புலன்சில் வந்தவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

    சாமியார்

    சாமியார்

    இந்த நிலையில்தான் ஒரு சாமியார் வந்து, சிறுவன் இறக்கவில்லை, நாடி இருக்கு, அவன் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார். உடனே குடும்பத்தாரும் சாமியாரின் வார்த்தையை வேத வாக்காக நினைத்து கொண்டு, ஒரு பெரிய பள்ளம் தோண்டி அதில் சிறுவனை அமர வைத்த நிலையில் வைத்து மண்ணைப் போட்டு மூடி விட்டனர்.

    ஜீவசமாதி

    ஜீவசமாதி

    காலையில் இருந்து இந்த சம்பவம்தான் நம்மை உலுக்கி எடுத்து வருகிறது. உயிர் இல்லை என்று சொல்லி ஜீவசமாதி என்றால்கூட பரவாயில்லை. உயிர் இருக்கு என்று சொல்லி ஜீவசமாதி செய்ததுதான் கொடுமையான அதிர்ச்சியாக உள்ளது.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    விஷயத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் கந்தசாமி உடனடியாக சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத கூடற்கூறு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, காலை சுமார் 9.00மணியளவில் அதற்கான வேலைகள் ஏற்பாடானது. இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    சாமியார் பழனி

    சாமியார் பழனி

    இந்த நிலையில், இது எல்லாத்துக்கும் காரணமான சாமியார் பழனியும் அவருக்கு அசிஸ்டெண்ட் 2 பேர்தான் என்பதால் மக்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும் இவர்கள் மேல்தான் திரும்பியது. இதையடுத்து போலீசார் பழனி, அவருடைய உதவியாளர்கள் 2 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒப்படைப்பு

    ஒப்படைப்பு

    இதையடுத்து கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் வட்டாட்சியர் ஜெயவேலு ஆகியோரின் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சிறுவனின் உடலை தோண்டி எடுத்தனர். பிறகு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து தனநாராயணன் உடலை மீண்டும் பெற்றோரிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது.

    அடுத்த நடவடிக்கை

    அடுத்த நடவடிக்கை

    மீண்டும் சிறுவனின் உடலை ஏற்கனவே இருந்ததுபோலவே தியான நிலையில் அதே இடத்தில் அடக்கம் செய்தனர். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த உடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+