திருவண்ணாமலை லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: 5 லட்சம் வாக்குகள் பெற்று சி.என்.அண்ணாதுரை வெற்றி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை : திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பியான சி.என்.அண்ணாதுரை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்பி-யான சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பாக கலியபெருமாள், பாஜக சார்பாக அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி சார்பாக ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

Lok Sabha Election 2024

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருப்பத்தூர் லோக்சபா தொகுதியாக இருந்தது. அதன்பின் திருவண்ணாமலை லோக்சபா தொகுதியாக மாறியது. தொகுதி மறுசீரமைப்பு முன்பு வரை திமுகவின் கோட்டையாக இருந்தது. இந்த தொகுதியில் திமுகவின் வேணுகோபால் 4 முறை எம்பியாக இருந்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஜெயமோகன் 3 முறை வென்றிருக்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் திமுக 2 முறையும், அதிமுக ஒருமுறையும் வென்றுள்ளது. 2009 லோக்சபா தேர்தலில் திமுகவின் வேணுகோபால் 4,73,866 வாக்குகள் பெற்று பாமகவின் காடுவெட்டி குருவை வீழ்த்தினார். அதன்பின் 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வனரோஜா 5,00751 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதன்பின் 2019 லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை 6,66,272 வாக்குகள் பெற்று வென்றார். சிட்டிங் எம்.பி.யான திமுகவின் சி.என்.அண்ணாதுரையை எதிர்த்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகியோர் தனித்து களமிறங்கியுள்ளதால், யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது லோக்சபா தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலையில் இருந்தார். அதன்பின் 8.45 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டன.

தற்போது 10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 55,808 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 32,730 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 19,025 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 9,190 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளார்.

தற்போது 11 மணி நிலவரப்படி திமுகவின் சி.என்.அண்ணாதுரை 67,146 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 39,812 வாக்குகளும், பாஜகவின் அஸ்வத்தாமன் 22,105 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 11,344 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.

பின்னர் 12.30 மணி நிலவரப்படி திமுகவின் சி.என்.அண்ணாதுரை 1,60,393 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 86,880 வாக்குகளும், பாஜகவின் அஸ்வத்தாமன் 48,071 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 23,481 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.

தற்போது 1.30 மணி நிலவரப்படி திமுகவின் சி.என்.அண்ணாதுரை 2,14,884 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 1,13,402 வாக்குகளும், பாஜகவின் அஸ்வத்தாமன் 64,749 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 30,913 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.

தொடர்ந்து 3 மணி நிலவரப்படி திமுகவின் சி.என்.அண்ணாதுரை 2,44,951 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 1,28,567 வாக்குகளும், பாஜகவின் அஸ்வத்தாமன் 70,423 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 34,910 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.

இறுதியில் திமுகவின் சி.என்.அண்ணாதுரை 5,37,468 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 2,99,278 வாக்குகளும், பாஜகவின் அஸ்வத்தாமன் 1,61,905 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 81,982 வாக்குகள் பெற்று இருக்கின்றனர்.

முந்திய தேர்தல் முடிவுகள்

திருமண்ணாமலை லோக்சபா தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வந்தாலும், அதிமுகவும் சவாலாக இருந்து வந்துள்ளது. அதேபோல் பாமக தொடர்ந்து போட்டியிட்டு வந்த தொகுதியை இம்முறை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் களத்தில் யார் முந்துகிறார்கள் என்பதை கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது.

2009 லோக்சபா தேர்தல் முடிவுகள் :

வேணுகோபால் ( திமுக ) - 4,73,866

குரு ( பாமக ) - 2,88,566

மணிகண்டன் ( தேமுதிக ) - 56,960

2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் :

வனரோஜா ( அதிமுக ) - 5,00,751

அண்ணாதுரை ( திமுக ) - 3,32,145

எதிரொலி மணியன் ( பாமக ) - 1,57,954

2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் :

சி.என்.அண்ணாதுரை ( திமுக ) - 6,66,272

கிருஷ்ணமூர்த்தி ( அதிமுக ) - 3,62,085

ஞானசேகர் ( அமமுக ) - 38,639

ரமேஷ்பாபு ( நாம் தமிழர் ) - 27,503

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+