Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையில் யாரிந்த பெண்? இரவு 11 மணிக்கு பாழடைந்த கட்டிடத்துக்கு காதலனை வரச்சொன்ன பெண்.. சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: எத்தனையோ மாணவ, மாணவிகள் இன்ஸ்டாகிராமில் மூழ்கி தங்களது எதிர்காலத்தையே தொலைத்து கொண்டிருக்கிறார்கள்.. இதுகுறித்த பல விழிப்புணர்களை காவல்துறை மேற்கொண்டுவந்த போதிலும், குற்றங்கள் பெருகியபடியே உள்ளன.. அதனால்தான், இன்ஸ்டாவில் மூழ்கும் தங்கள் பிள்ளைகளை அவ்வப்போது கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது சென்னையில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 17 வயதாகிறது.. இவர் தன்னுடைய அம்மாவுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வந்துள்ளார்.. சிறுமி எந்நேரமும் இன்ஸ்டாகிராமிலேயே நேரத்தை கழிப்பவராம்..

Tiruvannamalai Chennai old building

வடசென்னை காதலன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வடசென்னையை சேர்ந்த சாய் என்ற 22 வயது இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார்.. இவர்களின் நட்பு காதலாக மாறியிருக்கிறது... எனவே, சாயுடன் சிறுமி அடிக்கடி போனில் பேசிவந்துள்ளார்.. எப்போது பார்த்தாலும் செல்போனிலேயே மூழ்கியிருப்பதை கண்ட சிறுமியின் தாய், மகளை கண்டித்திருக்கிறார்.

இது சிறுமிக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் தந்தது.. எனவே, தன்னுடைய அம்மாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார் சிறுமி.. தன்னுடைய விருப்பத்துக்கு அம்மா தடையாக இருப்பதால், வெறுப்படைந்த சிறுமி, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டை விட்டே வெளியேறி, தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்..

தோழியின் வீட்டில்

பிறகு தன்னுடைய வீட்டுக்கே சென்றுவிடலாம் என்று சிறுமி முடிவு செய்தார்.. ஆனால் அதற்கு முன்பு, இன்ஸ்டா காதலனை சந்தித்து பேசிவிட்டு போகலாம் என்று நினைத்து, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, காதலனுக்கு போன் செய்துள்ளார்.... கொத்தவால்சாவடி பகுதியிலுள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு காதலனை வருமாறு அழைத்தார்..

காதலனும் சிறிது நேரத்தில் சிறுமி சொன்ன அந்த பழைய கட்டிடத்துக்கு வந்துவிட்டார்.. இருவரும் அங்கு பேசிக் கொண்டிருந்தனர்..

அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிடக்கூடிய நிலைமையில் இருந்ததால், அங்கு யாருமே தங்கியிருக்கவில்லை.. பழைய கட்டிடம் என்பதால், உயிருக்கு பயந்து, அந்த பகுதி மக்கள், அக்கட்டிடம் அருகில் செல்வதுமில்லையாம்..

கட்டிடத்தில் காதலன்

கட்டிடத்தில் சிறுமியும், காதலனும் பேசிக் கொண்டிருந்தபோது, காதலனின் நண்பர்கள் 2 பேர் திடீரென பைக்கில் வந்தனர்.. உடனே 3 பேரும் சேர்ந்து, அந்த சிறுமியை இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்துக்குள் இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்..

இதனிடையே பழைய கட்டிடம் பகுதியில் பைக் சத்தம் கேட்டதால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனித்து, போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.. உடனடியாக துறைமுகம் மகளிர் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால், போலீசாரை பார்த்ததுமே 3 இளைஞர்களும் பைக்கில் தப்பி ஓடி விட்டனர்.

சிறுமி - தாய் விசாரணை

பிறகு அங்கிருந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு இதுகுறித்து விசாரித்தனர்.. அப்போதுதான், பலாத்கார முயற்சியில் 3 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் அம்மாவுக்கு தகவல் தரப்பட்டு, அவரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.. இப்போது தாய், மகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

சாய் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இவர்கள் சிக்கினால் போக்சோவில் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.. எனவே, இதுதொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஆலோசனையை போலீசார் பெற்று வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+