திருவண்ணாமலையில் அர்த்தராத்திரியில் கொலுசு சத்தம்.. பாலாஜியை "வா, வா"னு கூப்பிட்டுச்சாமே அந்த பொண்ணு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் வீடியோவாக வெளிவந்து, இணையத்தில் பரவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில், அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதமும் ஒரு கொடூர விபத்து நடந்தது.

விபத்துக்கள்: மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில், குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் மீண்டும் பலர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள்,.
விபத்து நடந்த இடத்தில், சில வருடங்களுக்கு முன்பு, விவசாய பண்ணை இருந்ததாகவும், தற்போது அது செயல்படாமல் அடர்ந்த காடு போல காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சாலையில் அடர்ந்த தைல மரங்கள், கருவேல மரங்கள் நிறைய உள்ளதால், வெகுசீக்கிரத்திலேயே இருட்டிவிடுவதுடன், நாய்கள், பறவைகள் சத்தம் கேட்டபடியே உள்ளதாம்.
மர்ம உருவம்: இப்படிப்பட்ட சூழலில், அந்த சாலையின் குறுக்கே வெள்ளை கலரிலும், கருப்பு கலரிலும் மர்ம உருவங்கள் நடமாடுவதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்கள்தான், ஆவியாக நடமாடுவதாகவும், அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்..
இதனால், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும், விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு பூஜைகளையும் சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தனர்.. சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்து, கோழிகளை பலி கொடுத்திருந்தனர்.
பேய் பிசாசு: நிஜமாகவே, இந்த சாலையில் வெள்ளை, கறுப்பு உருவங்கள் நடமாடுகிறதா? பேய் இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை. இப்படியான கட்டுக்கதைகளை யார் கிளப்பி விட்டு வருகிறார்கள் என்றும் தெரியவில்லை.. ஆனால், சம்பவ இடத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.. ஒளிரும் விளக்குகளையும் வழியெங்கும் பொருத்தி, பொதுமக்களின் அச்சத்தையும் மாவட்ட நிர்வாகம் போக்கினால் நன்றாக இருக்கும்...!
இதுஒருபுறமிருந்தாலும், ஆரணி பாளையம் அருகே ஒரு சம்பவம் நடந்து, திருவண்ணாமலை மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.. பாலாஜி என்பவருக்கு 35 வயதாகிறது.. இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றிருக்கிறார்..
ஏரிக்கரை: பிறகு வேலை முடிந்தவுடன், தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவு 12 மணியாகிவிட்டது.. வடுகசாத்து ஏரிக்கரையை தாண்டிதான் தன்னுடைய ஊருக்கு பாலாஜி செல்ல வேண்டும்.. இந்த ஏரிக்கரையில் பைக்கை ஓட்டிக்கொண்டு பாலாஜி வந்து கொண்டிருந்தார்.. அப்போது திடீரென கொலுசு சத்தம் கேட்டுள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, பைக்கை நிறுத்திவிட்டு, சுற்றிப்பார்த்துள்ளார்.
அப்போது எதிரே பெண்ணின் உருவம் ஒன்று தோன்றியது.. அந்த உருவத்தை பார்த்ததும் பதறிப்போன பாலாஜி, உடனே பைக்கை எடுத்து கொண்டு செல்ல முயன்றார், அப்போது அந்த பெண்ணின் உருவம், பாலாஜியை பார்த்து, "வா... வா" என்று அழைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, பைக்கை திருப்பிக் கொண்டு, வந்த வழியில் திரும்ப சென்றுள்ளார்.. அப்போதும் அந்த உருவம் வா.. வா.. என்று அழைத்ததாம்.
வீடியோ: இந்த காட்சியை பாலாஜி தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்ததுடன், இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications