தங்க நகை.. தகதகன்னு மின்னுதே.. அள்ள அள்ள தங்கம்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. கடவுளே
திருவண்ணாமலை: போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும்கூட, பல்வேறு இடங்களில் ஏமாந்துவிடுகிறார்கள். அப்படித்தான் திருவண்ணாமலையிலும் ஒரு நகை மோசடி நடந்துள்ளது.
10 நாட்களுக்கு முன்புகூட, காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி, கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கி கிளைகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

இந்த 3 வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா நகைகளுக்கும் தங்க முலாம் பூசி அடமானம் வைத்திருப்பதும் ஆய்வில் தெரிந்தது.
தங்க முலாம்: மோசடி செய்வதற்காகவே, கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி நகைகளை இவர்கள் தயார் செய்து, இதனை அடமானம் வைத்து, 3 வங்கிகளிலுமே 2 கோடியே 53 லட்சம் பெற்றிருக்கிறார்கள்.. இதற்கு பிறகு, ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்தர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதோ இப்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.. பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. 52 வயதாகிறது.. கலசப்பாக்கம், மேலாரணி கூட்டுறவு சங்கங்களில் செயலராக பணிபுரிந்தவர். தற்போது, பில்லுார் கூட்டுறவு கடன் சங்கத்திலும் பணியாற்றுகிறார்.. இவர் கலசப்பாக்கம் மற்றும் மேலாரணி கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்த விவசாயிகள் சிலர், நகைகளை மீட்பதற்காக சென்றார்கள்.
விவசாயிகள்: அப்போது, தணிக்கை நடப்பதால், ஒரு வாரம் கழித்து வந்து நகையை மீட்டு கொள்ளுங்கள் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி உள்ளார்.. அதனால், ஒரு வாரத்துக்கு பிறகு விவசாயிகள் சென்றிருக்கிறார்கள்.
அப்போதும், தணிக்கை நடந்து கொண்டிருப்பதாக கிருஷ்ணமூர்த்தி சொல்லி உள்ளார்.. இதனால் சந்தேகமடைந்த விவசாயிகள், இது குறித்து, திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின்பேரில், கூட்டுறவு சங்க தணிக்கை துறை அதிகாரிகள் குழுவினர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தனர் அப்போதுதான் 2 வருடங்களாகவே, 90க்கும் மேற்பட்டோரின், 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகையை வைத்து, ஒரிஜினல் நகையை, மற்றொரு கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்து, 2 கோடி ரூபாய் பெற்று, மோசடியில் கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி : இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியின் சொத்துக்களை விற்கவோ, உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்யவோ கூடாது என்று கலசப்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கிருஷ்ணமூர்த்தியிடம் 30 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ள நிலையில், அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவதும், தொடர்ந்து நடந்து வருகிறது.. இதில் கொடுமை என்னவென்றால், ஒரிஜினல் போலவே, போலி தங்கத்தையும் மோசடிபேர்வழிகள் தயார் செய்கிறார்கள்.. எது அசல்? எது போலி? என்பதே கண்டுபிடிக்க முடிவதில்லை.. அந்த அளவிற்கு கனகச்சிதமாக போலியை தயார் செய்கிறார்களாம்.
மோசடிகள்: இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள், கவரிங் நகையை தயார் செய்து கொள்வார்கள்.. பிறகு, கவரிங்கின் தகட்டில் தங்கத்தை கோட்டிங் செய்துவிடுவார்கள்.. இது பார்ப்பதற்கு அச்சுஅசல் தங்கம் போலவே காணப்படும். பார்ப்பவர்களும் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள்.
எனவே எப்போதுமே, தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களும் அந்த நகையை உரசி பார்த்து, சரியாக சொல்லிவிடுவார்கள்.
முத்திரை: அதேபோல, ஹால்மார்க் முத்திரை இருந்தாலும்கூட, ஹார்மார்க் சென்ட்டருக்கே சென்று விசாரிக்கலாம்.. 916 முத்திரையுடன் நகைகளை வாங்குவது சிறந்தது என்று பலரும் பரிந்துரைக்கிறார்கள். அதனால், உங்களுக்கு நகை வாங்குவதில், விற்பதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், பாரம்பரிய ஆசாரிகளிடம் அணுகுவதே நல்லது.
அதேபோல, ஹால்மார்க் சென்ட்டரிலேயே நகையின் ஒரு பகுதியை வெட்டி, உருக்கி, எவ்வளவு தங்கம் இருக்கிறது? எந்த அளவுக்கு காப்பர் கலக்கப்பட்டுள்ளது? வெள்ளி அளவு எவ்வளவு என்பதையெல்லாம் சொல்லிவிடுவார்கள்.. புதிய நகைகள் என்றால் ஹால்மார்க் சென்டரிலும் பழைய நகைகள் வாங்குகிறீர்கள் என்றால் பாராம்பரிய ஆசாரிகளிடமும் விசாரித்து கொள்வது நல்லது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications