திருவண்ணாமலை மகா தீப திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை.. கலெக்டர் அதிரடி
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அங்கு நாளை சனிக்கிழமை முதல் 27 ஆம் தேதி வரை நகரத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் பஞ்சரத ஊர்வலம் மகா தேரோட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இலவச மினி பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்தவகையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை, புறவழிச் சாலையில் அமைந்துள்ள எலைட் அரசு மதுபான கடை இயங்காது.
திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் திரிசூல் ஹோட்டல் நளா ஹோட்டல், அக்ஷிரேயா ஹோட்டல், அம்மாயி, வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி உள்ளிட்ட கடைகள் வரும் வரும் 25.11.2023 12 மணி முதல் 27.11.2023 இரவு 10 மணி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications