உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

திருவண்ணாமலையில் பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட திமுக நிர்வாகியைப் பற்றிதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வயசானாலும் அழகும் இளமையும் மாறலையே என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் காதல் வந்துள்ளது. அவருக்கு மனைவி மகன்கள் இருந்தாலும் தனது பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு எங்கே யாருடன் எப்படி காதல் வந்தது என்று பார்க்கலாம்.

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

சுந்தரேசன் பல ஆண்டுகளாக திமுகவில் நிர்வாகியாகவும் இருக்கிறார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை பதவி வகித்திருக்கும் இவர் ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசி

சாவல் பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார் சுந்தரேசன். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமானார்.

பேச்சாளராக அறிமுகமான அபிதா உடன் நெருக்கமானார் சுந்தரேசன். இந்த நெருக்கம் காதலாக மாறியது. மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர்.

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+