Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையின் ஸ்பெஷாலிட்டி.. என்னாது அருணாசலேசுவரர் கோவில் பெயர் மாறுகிறதா? தமிழக அரசு சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. விரைவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், திருவண்ணாமலை கோயில் பெயரை அருணாசலேசுவரர் என்று மாற்றுவதாக, சோஷியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது.

திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். அதாவது, 200 கோடி வருடங்களுக்கு முற்பட்டது என்று கணித்து சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.. எனவேதான் திருவண்ணாமலையின் வயது 260 கோடி வருடங்கள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

tiruvannamalai temple tamilnadu government name

24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அண்ணாமலையார் கோயில், நடுநாட்டு தலங்களுள் முதன்மையானது.. பஞ்சபூதத் தலங்களுள் இதனை அக்னித் தலம் என்றும், நால்வராலும் பாடப்பட்ட தலம் என்றும் புகழப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான தம்பதியினர் இந்த கோயிலுக்கு வருகை தந்து வேண்டுதலை நிறைவேற்றி செல்வார்கள்.

கோவிலின் அற்புத சிறப்புகள்

சிவனின் அக்னி தலமாக விளங்கும் இந்த கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்தாலும், பௌர்ணமி கிரிவலத்திற்கே மிகவும் புகழ்பெற்றது. மாத மாதம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும், பக்தர்கள் 14 கி.மீ. கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள்..

அதேபோல, கார்த்திகை தீபம், மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தீபத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள்.. இத்தனை சிறப்பு வாய்ந்த் இந்த கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வருவதால், இந்து சமய அறநிலையத்துறையும், பக்தர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவிலின் பெயர் மாற்றம்?

இந்நிலையில், திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக "அருணாசலேசுவரர் கோவில்" என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ, சோஷியல் மீடியாவில் திடீரென பரவ துவங்கிவிட்டது.. இந்த வீடியோவை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. மேலும் அந்த வீடியோ பலருக்கும் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

இதையடுத்து, கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உண்மைக்கு புறம்பானது

"இது முற்றிலும் பொய்யான தகவல். திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், "1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட 'திருவண்ணாமலை வரலாறு' என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது" என்று கூறியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+