குடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்
திருவண்ணாமலை: குடிப்பழக்கம்.. அடிக்கடி சண்டை.. மனம் வெறுத்த மனைவி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து காப்பற்ற முயன்ற கணவனும் தீயில் கருகினார். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரத மனைவி தீபா. மணிகண்டன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார் இவர் மதுவுக்கு அடிமையானவராம்.

மணிகண்டன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகறாரில் ஈடுபட்டு வந்திருக்கிறாராம். இந்த நிலையில் 25 ஆம் தேதி இரவு கணவன்-மனைவிக்குள் பணம் கொடுக்கல்-வாங்கலில் விஷயமாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அன்று தீபா மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த தீபா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் எரியதொடங்கியதால் தீபா அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மணிகண்டன் மனைவி கண் முன்னே எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றார். இதில் மணிகண்டன் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினார். மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்துவிட்டார்.
படுகாயத்துடன் இருந்த தீபா திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி தீபாவும் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு கணவன் மனைவி உயிரிந்த சம்பவம் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications