தமிழக அரசுதான் திருவாரூர் தேர்தலை வேண்டாம் என்றது.. தேர்தல் ஆணையம் பரபர அறிக்கை!
தலைமைச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்தான் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தோம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

திருவாரூர்: தமிழக அரசு சார்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்தான் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தோம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தது ஏன் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
அதில், ஏப்ரல் வரை தேர்தலை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தலை நடத்தவில்லை. 19 தொகுதிக்கும் ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு கோரியது.

திருப்பரங்குன்றம் தேர்தல்
திருப்பரங்குன்றத்தில் தேர்தலை நடத்துவதில் பிரச்சனை இல்லை என்று கூறினார்கள். அதனால் தேர்தலை நடத்தவுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கஜா புயலை கிரிஜா வைத்தியநாதன் காரணம் காட்டி இருந்தார்.

கிரிஜா வைத்தியநாதன் கடிதம்
டிசம்பர் 17ம் தேதி கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதி இருந்தார். அதில் ஏப்ரல் முடியும் வரை தேர்தலை நடத்த கூடாது என்று கோரிக்கை வைத்து இருந்தார். அதன் தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசிடம் கருத்து கேட்ட பின்பே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

பொங்கல் விழா
மக்கள் கொண்டாடும் பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து வர இருப்பதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கஜா புயலில் இருந்து மக்கள் முழுதாக வெளிவர வேண்டும். இந்த தேர்தல் காரணமாக நிவாரண பணிகள் பாதிக்க கூடாது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications