பாஜகவின் பாணி சர்வாதிகாரமே.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது.. முதல்வர் ஸ்டாலின்
திருவாரூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது. பாஜகவின் பாணி சர்வாதிகாரம்தான் என்று திருவாரூரில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதில் இருந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை பெரும்பாலான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பிரச்சாரங்களை கட்சிகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், திமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இன்று திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது. பாஜகவின் பாணி சர்வாதிகாரம்தான். ஜனநாயகத்திற்கு விரோதமான அத்தனை செயல்களையும் செய்துவிட்டு பாஜக ஆடும் ஆட்டம் தான் அழுகுணி ஆட்டம். இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தியது பாஜக. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்கிறது பாஜக.
ஆட்சியில் இருந்த போது எதுவுமே செய்யாத பழனிசாமி, தமிழ்நாட்டில் எந்த நன்மையும் செய்யாமல் துரோகங்களை மட்டுமே செய்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தனது பங்குக்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தேர்தல் அறிக்கை அல்ல.. பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. அவர்கிட்ட அதிகாரம் இருந்த போது மத்திய அரசிடம் இருந்து எதையாவது பெற்று வந்தாரா...
உதவாக்கரையாக இருந்த பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா? ஆளுநரை நியமிக்கும் போது முதல்வரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டுமாம்... திமுகவின் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறாரே ஆளுநர்.. அவரை கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கிறீர்களா... தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மக்கள் பணிகளை எந்த தொய்வு இன்றி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications