முஸ்லிம்போல் நடித்து அண்ணாமலைக்கு புகழாரம்.. சிக்கிய சஞ்சய்! போலீசில் இஸ்லாமிய அமைப்புகள் புகார்
திருவாரூர்: முஸ்லிம் போன்று நடித்து அண்ணாமலையை புகழ்ந்து பேசிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல ஊர்களை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் புகார் அளித்து உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, சவளக்காரன் மேல நாலாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சஞ்சய். சஞ்சய் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூரில் அமைந்து இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இவர் படித்து வந்து உள்ளார். இவர் பேசிய வீடியோ ஒன்று கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

"இஸ்லாமிய முதல் தலைமுறை வாக்காளர் எடுத்த சபதம்" என்ற பெயரில் அந்த வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், தொப்பி அணிந்துகொண்டு தன்னை ஃபைசல் என்று அறிமுகம் செய்துகொள்ளும் சஞ்சய் அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என்று பேசி அவரை புகழ்ந்து இருந்தார். அவருக்கு பின்னால் மற்றொரு இளைஞரும் தொப்பி அணிந்து இருந்தார். அந்த இளைஞரின் பெயர் சுமன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அந்த வீடியோவில் பேசிய இளைஞர் இஸ்லாமியரே இல்லை என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியிட்ட சஞ்சய், “மன்னார்குடியில் அண்ணாமலை யாத்திரை நடைபெற்றபோது எனது யூடியூப் சேனலுக்கு கண்டெண்ட் கிடைக்கும் சென்றேன். நானும் சென்றேன். அப்போது நண்பர்களின் குல்லாவை எடுத்து போட்டோ எடுத்தபோது அங்கு பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நானே விருப்பப்பட்டு அங்கு பேசியது என் பெயர் சஞ்சய் என்று சொன்னவுடன் உன் பெயர் பைசல் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் அதையே சொன்னேன்.
என்னயா இது பித்தலாட்டம் 😂😂
— Raj ✨ (@thisisRaj_) December 11, 2023
ஃபைசல் என்கின்ற சஞ்சய். 😂
WAIT FOR IT😆 pic.twitter.com/zRXWFSYHxP
இதனால் மத பிரச்சனை ஏற்படுகிறது என்று சொன்னார்கள். தெரியாமல் புண்படுத்துவதும் வகையில் செய்துவிட்டேன். இனி அதுபோன்று செய்ய மாட்டேன். அந்த வீடியோவை பார்த்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு எம்மதமும் சம்மதம்தான்.” என்றார். இந்த நிலையில் இஸ்லாமியர் போன்று வேடமணிந்து இளைஞரை பேச வைத்து வீடியோ வெளியிட்டு உள்ள பாஜக மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டத் தலைவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்து இளைஞனை இஸ்லாமியர் போல் வேடமணிய செய்துபொய்ப் பிரச்சாரம் செய்த பாஜகவினர்!
— ஜெயராமன் திமுக (@jayaraman418) December 11, 2023
எனது முதல் வாக்கு அண்ணாமலைக்குதான் என்று இஸ்லாமியர்களின் பெயரில் (பைசல்) பேசிய இளைஞரின் பெயர் 'சஞ்சய் முருகன்', அவருக்கு பின்னால் நிற்பவரின் பெயர் 'சுமன்'
இவர்கள் இருவரும் லெட்சுமாங்குடி பகுதியை… pic.twitter.com/uufYignmJc
இதற்கிடையே அந்த இளைஞர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் காவல் நிலையத்தில் கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், தண்ணீர் குன்னம், நாகங்குடி ஆகிய ஜமாத்துக்களின் நிர்வாகிகளும், தமுமுக, மமக, எஸ்டிபிஐ, மஜக ஆகிய அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகளும் திரளாக சென்று புகார் அளித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “சஞ்சய் என்ற தன்னை ஃபைசல் என்றும், லெட்சுமாங்குடியில் வசிப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியுள்ளார். இது வலைதளங்களில் வெகுஜன நபர்களால் பகிரப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பின்மையையும், சமூக நல்லிணக்கத்தையும் போற்றுகின்ற மக்கள் வாழுகின்ற லெட்சுமாங்குடி சுற்றுவட்டார கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, அபிவிருத்தீஸ்வரம், பூதமங்கலம், நாகங்குடி, தண்ணீர்குன்னம் ஆகிய ஊர்களில் சலசலப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகின்ற சூழலை மேற்படி நபர் ஏற்படுத்தியுள்ளதால் அவர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications