திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சதி.. திருவாரூர் தேர்தல் ரத்து அதிர்ச்சி அளிக்கிறது.. அமமுக வேட்பாளர் காமராஜ் வருத்தம்!

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

It is so shocking says AMMK candidate S.Kamaraj on the halt of Thiruvarur by-election

இந்த திருவாரூர் தேர்தலுக்கு அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் எஸ்.காமராஜ். இந்த நிலையில் இந்த தேர்தல் ரத்து குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்க்கவில்லை.

திட்டமிட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல உள்ளது. அதிமுக, திமுக, பாஜகவின் திட்டமிட்ட சதி இது. அவர்கள்தான் தேர்தலை பார்த்து பயந்தனர்.

சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு! சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு!

தோல்வி பயம் காரணமாக தேர்தலை சந்திக்க அச்சம் கொண்டனர். தேர்தலுக்கு எதிராகவும் மனு அளித்து இருந்தனர். இப்போது அவர்கள் திட்டமிட்டபடி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது, என்றுள்ளார்.

English summary
It is so shocking and unexpected says AMMK candidate S.Kamaraj on the halt of Thiruvarur by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X