“சாமியார்” செய்த காரியம்.. அதிர்ந்த திருவாரூர்! “துப்பாக்கியுடன்” வங்கியில் மிரட்டல் - என்னாச்சு?
திருவாரூர்: குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டும் வகையில் புகைப்பிடித்து பேஸ்புக்கில் லைவ் செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடி பகுதி. இந்த ஊரை சேர்ந்த திருமலை சாமி என்ற சாமியார் இடி மின்னல் சங்கம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
துறவிகளைபோல் காவி வேட்டை காவி துண்டுடன் வலம் வரும் இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து இருக்கிறார்.

துப்பாக்கியுடன் சாமியார்
அந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. "காவி உடை அணிந்து கையில் ஏதோ ஒரு பொருளை காவி துண்டால் மறைத்தபடி நடந்து செல்லும் திருமலை சாமி, மேற்கூரை இல்லாத ஒரு ஜீப்பில் ஏறுகிறார். அப்போதுதான் அவரது கையில் இருந்தது பெரிய துப்பாக்கி என்பது தெரியவந்தது. அந்த ஜீப்பை காவி துண்டு அணிந்த மற்றொரு நபர் ஓட்ட கார் வேகமாக அங்கிருந்து நகர்ந்தது.

தனியார் வங்கி
சிறிது தூரம் சென்ற அந்த ஜீப் மஞ்சக்குடியில் இருக்கும் சிட்டி யூனியன் என்ற தனியார் வங்கியின் வாயிலில் நின்றது. ஜீப்பில் இருந்து இறங்கிய சாமியார் திருமலை சாமி வேகமாக வங்கிக்குள் நுழைந்தார். அங்கு வாயிற் காவலராக நின்றுகொண்டிருந்த ஒரு முதியவர், சாமியாரை தடுத்து நிறுத்தாமல் வங்கிக் கதவை திறந்தார்.

மிரட்டல்
வங்கி உள்ளே சென்ற சாமியார், அங்கிருந்த வங்கி ஊழியர்களை நீண்ட நேரமாக மிரட்டி வாக்கு வாதம் செய்து துப்பாக்கியுடன் அங்கும் இங்குமாக நடந்தார். இதனை தொடர்ந்து வங்கியில் இருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து புகைப்பிடித்த அவரை வங்கி ஊழியர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது
சாமியார் பேஸ்புக்கில் லைவ் செய்த இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்த சாமியார் திருமலையை போலீசார் கைது செய்தனர். தனக்கு வங்கிக் கடன் தர மறுத்ததால் சாமியார் துப்பாக்கியுடன் உள்ளே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications