Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா போய் கச்சேரி நடத்திய சிவாவின் தாத்தாக்கள்! சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமம் இதான்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: நடிகர் சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமம் என்பது திருவாரூர் பக்கம் உள்ள ஒரு கிராமம்தான் எனத் தெரியவந்துள்ளது.

பலரும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் திருச்சி என்றுதான் சொல்லி வருகிறார்கள். அவரும் தனது பூர்வீகம் திருச்சி என்பதைப் போலத்தான் பேசி வருகிறார். வேறு சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரிதான் அவர் பூர்வீகம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு ஊர்களுமே அவரது பூர்வீகம் கிடையாது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

sivakarthikeyan mk stalin

அவருக்குச் சொந்த ஊர் என்றால் அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்தான். சிவாவின் அப்பா காவல்துறை அதிகாரி பிறந்தது, வளர்ந்தது முழுக்க நாச்சியார்கோவில் போகும் வழியில் உள்ள நன்னிலம் அருகிலுள்ள திருவீழிமிழலைதான். எந்தளவுக்கு தமிழ் மணம் ஊர்ப் பெயரிலேயே வீசுகிறது என்று பாருங்கள். இந்த கிராமத்தில் திருவீழிதாதேஸ்வர திருக்கோயில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இந்தக் கோயில் அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் இந்த ஊரில் புகழ்பெற்ற பல நாதஸ்வர கலைஞர்கள் இருந்துள்ளனர். இப்போதும் ஆண், பெண் எனப் பேதம் இல்லாமல் பல இசைக்கலைஞர்கள் இருக்கின்றனர். சிவாவின் தாத்தாக்களான கோவிந்தராஜ் பிள்ளை, தட்சணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் மிகப் பிரபலமான நாதஸ்வர கலைஞர்களாக இருந்துள்ளனர். பல நாடுகள் சென்று கச்சேரி நடத்தும் அளவுக்கு இந்தச் சின்ன கிராமத்திலிருந்து கொண்டே இருவரும் சாதித்துள்ளனர். திருவீழிமிழலை சகோதரர்கள் என்று இசைத்துறை தனித்து அடைமொழி போட்டு அழைக்கப்பட்டுள்ளனர்.

sivakarthikeyan mk stalin

சிவாவின் தாத்தாக்கள் இருவரும் 1987லேயே ரஷ்யா போய் கச்சேரி நடத்திவிட்டு வந்துள்ளனர். இதன் அடையாளமாக அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், இந்த இருவரையும் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அதை இப்போதும் சிவாவின் தாத்தா குடும்பத்தினர் பத்திரமாக வைத்துக் காப்பாற்றி வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள கோயில் பக்கத்திலேயே மூன்றாவதாக அமைத்துள்ளது சிவகார்த்திகேயனின் அப்பா வீடு, பழைய வீட்டை இடித்துவிட்டு, இப்போது மாடர்னாக ஒரு வீட்டைச் சிவா கட்டி இருக்கிறார்.

சிவாவின் அப்பா வீட்டுக்கு முன்பாக குடியிருக்கிறார் சேகர். அவர், "தாத்தா காலத்திலிருந்தே சிவாவின் குடும்பம் ராஜ பரம்பரை. அவரின் தாத்தா இருவரும் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா எனப் பல ஊருக்குப் போய் கச்சேரி நடத்தி இருக்கிறார்கள். சிவா அப்பா இங்கேதான் பிறந்தார். பின்னால் சிறை அதிகாரியாக வேலை செய்த போது திருச்சி போய் செட்டில் ஆகிவிட்டார்.

sivakarthikeyan mk stalin

அவருடன் சேர்ந்து பிறந்தவர்கள் 5 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள். சமீபத்தில் சிவா அவருடைய குழந்தைகளை அழைத்து வந்து குல தெய்வம் மாரியம்மன் கோயிலில் மொட்டை அடித்து காது குத்தினார். 35 கெடா வெட்டி பிரியாணி போட்டார். அவர்தான் இடிந்து கிடந்த இந்த வீட்டை 3 வருடங்கள் முன்பு கட்டினார்" என்கிறார்.

சிவாவின் அப்பா வீட்டுக்கு அருகில் இருப்பவர் பெயர் குமார். அவர் சிவாவை சின்ன வயதில் அரைக்கால் டவுசர் போட்டு கிரிக்கெட் விளையாடிய காலத்திலிருந்து தெரியும் என்கிறார். மரங்கொத்திப் பறவை படம் முழுக்க இந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்றும் சொல்கிறார். சிவாவின் உறவினர்கள் பலரும் இங்கேதான் வாழ்ந்து வருகின்றனர்.

sivakarthikeyan mk stalin

சிவா அப்பா பிறந்து வளர்ந்த வீட்டில் அவரது சித்தப்பா பாபுதான் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரிய பங்களா போல் வீடு இல்லை என்றாலும், நகரத்தில் உள்ள வீடுகளுடன் ஒப்பிடும்போது இந்தக் கிராமத்திற்கு இது மிகப்பெரிய பங்களாதான். வீட்டில் சிவாவின் அப்பா, அத்தை புகைப்படங்கள் உள்ளன. கோவிந்தராஜ் பிள்ளை என்பவர்தான் சிவாவின் நேரடி தாத்தா. அவருடைய தம்பி தட்சிணாமூர்த்தி பிள்ளை. சிவாவின் சின்ன தாத்தா.

இதில் பலருக்கும் தெரியாத இன்னொரு விசயம் என்னவென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு சிவகார்த்திகேயன் குடும்ப உறவினர். இந்தக் கிராமத்து வீட்டில் குடியிருக்கும் சித்தப்பா பாபுவின் மனைவியின் சகோதரியைத்தான் தயாநிதிமாறனின் தாய்மாமன் மணம் புரிந்துள்ளார். இந்த வகையில் ஸ்டாலின் குடும்பத்தின் உறவுக்காரராகவும் சிவா மாறியுள்ளார். அந்தப் பாசத்தில்தான் அவரது படத்தை நேரம் ஒதுக்கி வந்து பார்த்தும் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+