வயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வயல்வெளிகளில் விவசாய பணிகளை செய்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் செல்பி எடுத்தார். இவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இரு ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் அவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பற்றி கொள்ள அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக என போட்டி போட்டு கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது. அது போல் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை டெல்டா மாவட்டங்களில் செய்து வருகிறார்.

திருக்குவளை
இந்த பிரசாரத்தை தனது தாத்தாவின் சொந்த ஊரான திருக்குவளையில் தொடங்கினார். பின்னர் குத்தாலத்தில் பிரசாரம் செய்தார். இது போல் இரண்டு முறை உதயநிதி கைது செய்யப்பட்ட போதிலும் அவர் விடாது தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

திமுகவின் நோக்கம்
மீனவர்கள், விவசாயிகள் என நலிந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் உதயநிதி திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு திமுகவின் நோக்கம், கொள்கை குறித்து பேசினார்.

வேளாண் பணி
பின்னர் அங்கிருந்தவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து கருப்பு சிவப்பு நிற தொப்பிகளை சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர்
திருவாரூர்(மா) திருத்துறைப்பூண்டி தொகுதி எடையூரில் வயல்வெளியில் வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

உதயநிதி
அந்த சகோதர - சகோதரிகளுடன் விரும்பி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் உதயநிதி பதிவிட்டுள்ளார். இது போல் மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் மனங்களை உதயநிதி கொள்ளை கொள்கிறார். உதயநிதியிடம் தாய்மார்கள் ஸ்டாலினை கேட்டதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதியின் பிரசாரம் பெரும் பலனை கொடுத்ததாக திமுகவினர் கருதுகிறார்கள்.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications