அமெரிக்க அதிபர் தேர்தல்:கமலா ஹாரிஸ் வெற்றி பெற திருவாரூர் அருகே பூர்வீக கிராம மக்கள் பிரார்த்தனை!
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுத்தில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் பொதுமக்கள் ஒன்று திரண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழ்நாடு பாணியில் பிளக்ஸ் பேனர் வைத்தும் அசத்தி உள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திடீரென ஜோ பைடன், போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், அமெரிக்கா அதிபர் தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி. கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான போதும் துளசேந்திரபும் உலக அளவில் கவனம் பெற்றது.

தற்போது அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் களம் காண இருப்பதும் துளசேந்திரபும் பக்கம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. துளசேந்திரபுரம் மக்களும் கமலா ஹாரீஸ், அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டும் என பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மிகவும் பழமையான தர்ம சாஸ்தா கோவிலில் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தினர்.

மேலும் கமலா ஹாரீஸ், அமெரிக்காவின் அதிபரானால் இந்தியவுடனான நட்புறவு மேம்படும்; இருநாடுகளிடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். இது இருநாடுகளுக்கும் நன்மை தரக் கூடியதாக இருக்கும். இந்தியாவுக்கும் பெரும் பலம் தரக் கூடியதாக இருக்கும். ஆகையால் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்கின்றனர் துளசேந்திரபுரம் பொதுமக்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications