"கர்ணன்" பட பாணியில் வந்த பிரச்சனை.. அழுத மூதாட்டி! டக்குன்னு அதிகாரியை கூப்பிட்ட முதல்வர்.. சம்பவம்
நாகை: முதல்வர் ஸ்டாலினின் டெல்டா பயணத்தில் அவரிடம் மக்கள் பலர் கோரிக்கைகளை வைத்தனர். இதில் பல கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அந்த இடத்திலேயே தீர்வுகளை அளித்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு திருச்சி செல்லும் அவர்.. இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் குளங்கள், ஆறுகள் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் பேசினார்.

ஸ்டாலின் டெல்டா
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கும் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. கல்லாறு தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் மயிலாடுதுறைக்கு முதல்வர் சென்றார். அங்கும் பல்வேறு வடிகால் தூர்வாரும் பணிகளை அவர் கவனித்தார்.

திருவாரூர்
இந்த நிலையில்தான் சில மணி நேரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் வந்தார். அங்கு கலைஞர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை அவர் மேற்பார்வையிட உள்ளார். முன்னதாக விவசாயிகள் தங்கள் பொருட்களையும், வாகனங்களையும் காட்சி படுத்தி இருந்தனர். அவர்களிடம் பேசிக்கொண்டே வந்த முதல்வர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் மனுக்களை கொடுத்தனர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக விவசாயிகள் தங்கள் பொருட்களையும், வாகனங்களையும் காட்சி படுத்தி இருந்தனர். அவர்களிடம் பேசிக்கொண்டே வந்த முதல்வர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் மனுக்களை கொடுத்தனர்.

தண்ணீர் இல்லை
அங்கிருந்த மூதாட்டிகள் சிலர் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றனர். அப்போது அங்கு வந்த மூதாட்டி நடிகர் தனுஷின் கர்ணன் பட பாணியில்.. ஐயா.. இங்க மட்டும் பஸ் நிற்க மாட்டேங்குது ஐயா. பக்கத்து ஊர்ல பஸ் நிக்குது. எங்க ஊர்ல நிற்க மாட்டேங்குது என்று கூறினார். அங்கேயே அவர் கண்ணீர்விட்டபடி பேசினார், உடனே முதல்வர் ஸ்டாலின் அந்த மூதாட்டி கையை பிடித்துக்கொண்டார்.

ஸ்டாலின் உறுதி
இதையடுத்து அருகில் இருந்த அதிகாரியை அழைத்து.. என்னாச்சு.. ஏன் பஸ் நிக்கல. என்னன்னு பாருங்க என்று சொன்னார். இதையடுத்து அவர்.. இங்கே பஸ் ஸ்டாப் இல்லை. கட்ட சொல்லி இருக்கிறோம். விரைவில் கட்டப்படும். இங்கே பஸ்களை நிறுத்த சொல்லி இருக்கிறோம். விரைவில் அதுவும் அமலுக்கு வரும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து முதல்வருக்கு அங்கிருந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications