சந்திரபாபு நாயுடு தலையில் என்ன அது? லட்டு சர்ச்சைக்கு நடுவே திருப்பதிக்கு சேலை சுமந்து சென்றது ஏன்?
திருப்பதி: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலையில் பட்டு சேலையை சுமந்து சென்று காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் காரணம். அவர் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டார் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையையும் சந்திரபாபு நாயுடுவின் கட்சி வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி முற்றிலுமாக மறுத்தார்.
ஆனால் ஆளும் கட்சியான சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் விடவில்லை. லட்டு விஷயத்தில் நடந்த தவறுக்க்காக பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருப்பதாக கூறி அதனை கடைப்பிடித்து கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பட்டு சேலையை தலையில் வைத்து சுமந்து சென்று சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினார்.
திருமலையில் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின்மீது சுமந்து வந்தபடி கோயில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருட பிரமோற்சவ விழா தான் காரணம். இந்த விழா நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கியது. பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கொடி மரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.
இந்த திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார்.
அதன்பிறகு ஆண்டுதோறும் இந்த விழா என்பது நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவின்போது ஆந்திர முதல்வராக இருப்பவர்கள் சுவாமிக்கு பட்டு சேலையை காணிக்கையாக வழங்குவது வழக்கம். அந்த வகையில் தான் இந்த ஆண்டு முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு பட்டு சேலையை தலையில் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கி ஏழுமலையானை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications