ரஜினியே மிரண்ட போவாரு.. நடிகை ரோஜா அப்படியே சட்டென பேச.. ஜெகன் ரியாக்ஷன் தான் ஹைலைட்
திருப்பதி: சித்தூர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய நடிகையும் அமைச்சருமான ரோஜா, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ரஜினி டயலாக்கை அப்படியே பிசுறு தட்டாமல் பேசினார். பவன் கல்யாணை விமர்சிக்க இந்த பன்ச் டயலாக்கை ரோஜா பேசியதும், குலுங்கிக் குலுங்கி சிரித்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திர மாநிலத்திற்கு 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒன்றாக ஆந்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 7 மாதங்களே இடையில் உள்ளதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசமும் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களுக்கான கூட்டத்தையும், அரசியல் ரீதியாக, சந்திரபாபு நாயுடுவையும், நடிகர் பவன் கல்யாணையும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷையும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் சித்தூர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய நடிகையும் அமைச்சருமான ரோஜா, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ரஜினி டயலாக்கை அப்படியே பிசிறு தட்டாமல் பேசினார். பவன் கல்யாணை விமர்சிக்க இந்த பன்ச் டயலாக்கை ரோஜா பேசினார்.
அப்போது ரோஜா பேசுகையில், "நடிகர் பவன் கல்யாண், லோகேஷ் (ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்) ஒவ்வொரு ஊராக போய் ஜெகன் மோகன் ரெட்டியையும் அவரது ஆட்சியை விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாதம் தான் ஒரு படம் ரிலீஸ் ஆகி உள்ளது. ரஜினிகாந்த் படம் ஜெயிலர். அந்த படத்தில் ஒரு டயலாக் வரும். அதில் ரஜினி இப்படி பேசுவார். கொலைக்காத நாயும் இல்லை.. குறை சொல்லாத வாயும் இல்லை.. இது இரண்டும் இல்லாட்டி ஊரும் இல்லை.. புரியுதா ராஜா.. அர்த்தமைந்தா ராஜா" என்று ரோஜா பவன் கல்யாணை நடிகை ரோஜா விமர்சித்தார். ரோஜா பேச , பேச, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விழுந்து விழுந்து சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரோஜா, ஒவ்வொரு ஊராக போய், லோகேஷ், பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு ஆகியோர் என்ன தான் பொய் பேசினாலும், ஆந்திர மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ள ஜெகன் அண்ணா (ஜெகன் மோகன் ரெட்டி) 2024 ம் ஆண்டில் மறுபடியும் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக வருவார் என்றும் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications