21 ஆண்டுகளுக்கு முன் நடந்த 'கொடூர சம்பவம்'... பலத்த பாதுகாப்புடன் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு!
திருப்பதி: ஆந்திரா முதல்வராக 4-வது முறையாக பதவியேற்ற தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் இன்று தமது குடும்பத்தினருடன் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திரா மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திராவிலும் ஜெகன் மோகனிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திரா முதல்வராக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவியேற்றார். சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திரா முதல்வராக மீண்டும் பதவியேற்ற உடனேயே சந்திரபாபு நாயுடு முதலில் திருமலைக்கு நேற்று இரவு குடும்பத்தினருடன் வருகை தந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் திருமலை காயத்ரி விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு ஓய்வெடுத்தார்.
இதனையடுத்து இன்று காலையில் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

திருமலை திருப்பதிக்கு சந்திரபாபு நாயுடு வருகை தந்ததால் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வருகை தந்து கொண்டிருந்தார். அப்போது அலிபிரியில் சந்திரபாபு நாயுடு சென்ற பாதையில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை திடீரென வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் சந்திரபாபு நாயுடு உயிர் பிழைத்தார். சந்திரபாபு நாயுடுவின் உயிரைக் குறிவைத்து மொத்தம் 17 கண்ணிவெடிகளை மாவோயிஸ்டுகள் அங்கு புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய திருப்பதி வருகையின் போதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முழுமையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் டிஐஜி ஷிமுஷிபாய் பாய் இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டிருந்தார். 2003-ம் ஆண்டு போல அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்ற அறிவுரை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications