திமுகவைப் பாராட்டிய பவன் கல்யாண்.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க
திருப்பதி: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்ட கந்த சஷ்டி திருவிழாவை குறிப்பிட்டு, தனது கடினமான தருணங்களில் கந்த சஷ்டியை கேட்பதன் மூலம் வலிமை பெறுகிறேன் என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு முருகன் கோயில்களிலும் காப்புக் கட்டிக் கொண்டு நேற்று முதல் விரதத்தை தொடங்கியுள்ளனர். ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம் நவம்பர் 8 ஆம் தேதி சூரசம்ஹாரத்தன்று நிறைவு செய்யப்படவுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சென்னையில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கடினமான காலங்களில் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை கேட்பது மூலம் தனக்கு வலிமை கிடைப்பதாக பவன் கல்யாண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முருகப் பெருமானை (கார்த்திகேய சுப்பிரமணியம்) போற்றும் கந்த சஷ்டி கவசத்தை தமிழ்நாடு கொடுத்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை குழந்தைகள் அழகாக விளக்கும் காட்சி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. கடினமான காலங்களை நான் சந்திக்கும்போது சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசத்தை கேட்பதன் மூலம் மிகுந்த வலிமையைப் பெறுவேன். துறவிகள் மற்றும் சித்தர்களின் தேசம் வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு புனிதமாகக் கருதப்படுகிறது. அந்த லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்தததாக சர்ச்சை எழுந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திருப்பதியில் ஏற்பட்ட அசுத்தத்தைப் போக்கும் வகையில் பரிகார தீக்ஷை மேற்கொண்டார்.
விரதமிருந்து திருப்பதி சென்று தீக்ஷை பரிகாரப் பூஜை நடத்தினார். திருப்பதி லட்டு சர்ச்சைக்குப் பிறகு சனாதன தர்ம விவகாரத்தை பவன் கல்யாண தீவிரமாக கையில் எடுத்துள்ளார். சனாதன தர்மம் மற்றும் அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை தடுக்கும் வகையில், கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கடந்த மாதமே பவன் கல்யாண் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுகுறித்து பவன் கல்யாண் கூறுகையில், "சனாதன தர்மத்தை காக்கவும் இழிவுபடுத்துவதை தவிர்க்கவும் கடுமையான தேசிய சட்டம் அவசியம். நாடு முழுவதும் உடனடியாக இதற்கான சட்டத்தை ஏற்ற வேண்டும்" என்றார். மேலும், சனாதன தர்மம் விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக கடந்த மாதம் பவன் கல்யாண சாடியிருந்தார்.
சனாதனம் என்பது ஒரு வைரஸ் போன்றது. அதனை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். இதை சொன்னவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை அழிக்க முயற்சித்தால், நீங்கள்தான் அழித்து போவீர்கள்.
உங்களைப் போல பலர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் உள்ளது. மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை கிடையாது. இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் . சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. கண்டிக்காவிட்டாலும் தவறு தவறுதான்" என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்ட கந்த சஷ்டி கவச திருவிழாவைக் குறிப்பிட்டு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பலர் பாசிட்டிவான கமெண்ட்டுகளையும், திமுகவையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications