திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட பிரம்மாண்ட அறிவிப்பு.. ஏழுமலையான் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி: ஆந்திர மாநில தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதல் கீழ் அன்னப்பிரசாதத் திட்டம் இப்போது திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தன் கீழ் செயல்படும் அனைத்து உள்ளூர் கோவில்களிலும் அன்னப்பிரசாத செயல்பாடு தொடங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்களுக்கு திருப்தியான அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தான அன்னப்பிரசாதத் துறை 3 முக்கிய சமையல் அறைகளை கொண்டது. அவற்றில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அட்சய சமையல்அறை, வகுளமாதா சமையல்அறை ஆகியவை ஆகும். இவை அனைத்தும் இரவு பகலாக இயங்கி வருகின்றன.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் சுமார் 74 ஆயிரம் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. அட்சய சமையல்அறை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் பக்தர்களின் அன்னப்பிரசாதத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் வகுளமாதா சமையல்அறை சுமார் 77 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குகிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத் திட்டத்தை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் நந்தமூரி தாரக ராமாராவ் (என்டிஆர்) 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திருமலையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி ஒரு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.
ஆந்திர மாநில தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதல் கீழ் அன்னப்பிரசாதத் திட்டம் இப்போது திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தன் கீழ் செயல்படும் அனைத்து உள்ளூர் கோவில்களிலும் அன்னப்பிரசாத செயல்பாடு தொடங்கப்படும்.
தினசரி உணவு விவரங்கள்
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் தினமும் காலை கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, சேமியா உப்புமா, பொங்கல், சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகின்றன.
மதியம் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறிகள், சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
மாலை சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறி, சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
அட்சய சமையல் அறை
அட்சய சமையல் அறையில் தினமும் கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், தேநீர் மற்றும் காபி ஆகியவை வழங்கப்படுகின்றன.
அதிக பக்தர்கள் வரும் நாட்களில் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு மோர், பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகளும் வினியோகிக்கப்படுகின்றன.
வகுளமாதா சமையல் அறை
வகுளமாதா சமையல் அறையில் சுமார் 1,000 அன்னப்பிரசாதப் பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களின் அயராத முயற்சியால் பக்தர்களுக்கு அமைனிட்டி காப்ளக்ஸ் 2,4,5 உணவுக் கூடங்கள், மத்திய விசாரணை அலுவலகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1, ராம் பகீச்சா விருந்தினர் மாளிகை, அஞ்சனாத்ரி நிலையம் குடில்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் உப்புமாவை தயாரித்து வழங்கப்படுகின்றன. திருமலையை அனைத்து நேரங்களிலும் பக்தர்களுக்கு உணவு தடையின்றி வழங்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications