குளிக்க சென்ற விஜயலட்சுமி.. பாய்ந்து தாக்கிய கரடி.. திருப்பதி மலையில் பரபரப்பு!
இளம்பெண் மீது கரடி பாய்ந்து தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்தார்
Recommended Video
திருப்பதி: குளிக்க சென்ற விஜயலட்சுமியை, மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென பாய்ந்து தாக்கிய சம்பவம் திருப்பதியையே அதிர வைத்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள கோகர்பம் அணை அருகே ஏராளமான மடங்கள் இருக்கின்றன. சாமி கும்பிட வரும் பக்தர்கள் இந்த மடங்களில் தங்குவது வழக்கம். இந்த மடங்களுக்கு பின்புறம் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், ஐதராபாத், நாகர்கரூரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற இளம்பெண் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார். எங்கே போவது என்று தெரியாமல், திருப்பதி மலைக்கு வந்துள்ளார்.
அங்குள்ள அணையில் குளிக்கலாம் என்று ஆசைப்பட்ட விஜயலட்சுமி அருகில் சென்றார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென விஜயலட்சுமி மீது பாய்ந்து தாக்கியது. இதனால் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்து கதறினார்.
இவரது சத்தம் கேட்டு மடங்களில் இருந்தவர்கள் ஓடிச்சென்று விஜயலட்சுமியை காப்பாற்ற முயன்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்ததும், கரடி அங்கிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடிவிட்டது. கரடி தாக்குதலில் விஜயலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இதனால் உடனடியாக மீட்கப்பட்டு திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று கரடி தாக்கியதால் காயம் அடைந்த விஜயலட்சுமியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications