HMPV வைரஸ் முன்னெச்சரிக்கை.. திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்க வாசல் தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வர். வரும் ஜனவரி 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அனைத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
திருப்பதியில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சொர்க்க வாசல் விழா நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்காமல் இருக்கும் வகையில் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசிப்பதற்கு கவுன்ட்டர்களில் டோக்கன்களை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹெச்எம்பிவி (HMPV) வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை திருமலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். சொர்க்கவாசல் திறந்திருக்கும் இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
டோக்கன்களை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கெட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலையில் திருமலையில் தங்க தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த நாளான ஜனவரி 11 ஆம் தேதி காலை சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications