மாட்டிறைச்சி லட்டு! கூட்ட நெரிசல் பலி! திருப்பதியில் அடுத்தடுத்து துர்சம்பவங்கள்! கலங்கும் பக்தர்கள்
திருப்பதி: ஒரு காலத்தில் மக்கள் கூட்டத்திற்கு மட்டும் பிரபலமாக இருந்த திருப்பதி கோவில் இப்போது தவறான சில சம்பவங்களால் பிரபலம் ஆகி வருகிறது.
திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் புகார் வைத்தார். லட்டுவில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக புகார் வைத்தார். லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.

ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்தார்.
புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம். சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
திருப்பதி கோவிலில் அடுத்த சர்ச்சை:
இந்த சர்ச்சையே அடங்காத நிலையில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் அங்கே பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டோக்கன் பெறுவதற்கு கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்துள்னர். இதையடுத்து அங்கே நிலைமை மோசமாகி.. கீழே விழுந்தவர்கள் மீது கால் வைத்தவர்கள் மேலும் பலர் தடுக்கி கீழே விழுந்தனர்.
கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் சம்பவ இடத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். . சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
திருப்பதி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருமலைக்கு வருகை தருகிறார். இந்த விபத்திற்கு காரணமாக அதிகாரிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications